லாஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை.! முகம் சுழித்த சிம்புவின் நண்பரும் நடிகரும்.!

0
13929
Losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிய் என்றாலே அதில் ரசிகர்களுக்கு அபிமானமான போட்டியாளர்கள் என்று இருக்கத்தான் செய்கின்றனர். முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா என்று இளம் பெண் போட்டியாளர்கள் தான் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் பல இளசுகளின் பேவரைட் போட்டியாளராக இருந்து வருபவர் லாஸ்லியா மட்டும் தான். ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் இவர் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார் லாஸ்லியா.

- Advertisement -

லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

Losliya

அதிலும் கடந்த சில நாட்களாக இவர் பலரால் வெறுக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிம்புவின் நண்பரும், நடிகரும், நடன இயக்குனருமான ராபர்ட் மாஸ்டர் பேசுகையில் பிக்பாஸ் வீட்டில் வனிதாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அவருக்கு பிறகு எனக்கு பிடிக்காத ஒரு ஆள் என்றால் அது லொஸ்லியா தான்’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement