என் அப்பாவிற்கு நான் இப்போது செய்யும் வேலை கூட புடிக்கவில்லை – தந்தை குறித்து லாஸ்லியா பேசிய கடைசி வீடியோ.

0
7895
losliya

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் முகேன், தர்ஷன், லாஸ்லியா என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதில் மிகவும் பிரபலமடைந்தது என்னவோ லாஸ்லியா தான். இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட 24 மணி நேரத்திலேயே இவருக்கென்று பல ஆர்மி கூட துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் மற்றும் லாஸ்லியாவின் காதல் தான் மிகவும் லைட் ஆக இருந்து வந்தது.

கவின் லாஸ்லியா இருவரும் பிக் பாஸ் வீட்டில் காதலிதது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இருவருமே தங்கள் காதலை வெளிபடையாக கூறவில்லை எது வேண்டுமானாலும் வெளியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று கவின் அடிக்கடி கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்தது . கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள்சென்று இருந்தார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா.

- Advertisement -

ஆனால், ககவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடுங்கள் என்று அறிவுரை கூறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் லாஸ்லியாவின் தந்தை. இப்படி ஒரு நிலையில் நேற்று (நவம்பர் 15) இரவு கன்னடா நாட்டில் இவர் மாரடைப்பு காரணமாக இருந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி தந்தையர் தினத்தை முன்னிட்டு லாஸ்லியா தனது தந்தைக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஆண்டு என் தந்தைக்கு வாழ்த்து தெரிவிக்க வில்லை. பின்னர் அவரே எனக்கு போன் செய்து என் எனக்கு யாருமே வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்டார். அவர் எனக்காக பல கஷ்டங்களை தாங்கி கொண்டு இருக்கிறார்.அவர் கனடாவில் இருந்தாலும் அவருடைய சம்பாத்தியம் மிக குறைவு தான். ஆனால், மாச மாசம் எனக்கு செலவுக்கு காஸ் கொடுப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு ஆன செலவை அவர் தான் பார்த்துக்கொண்டு இருந்தார். அதே போல அவர் எனக்காக பல தியாகங்களை செய்து உள்ளார். அவருக்கு நான் இப்போது செய்யும் வேலை கூட புடிக்கவில்லை. ஆனால், என்மேல வைத்திருக்கும் பாசத்திற்காக அவர் என்னை சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement