ஸ்கூல் பாப்பா போல ரெட்டை ஜடை, வெள்ளை உடையில் தேவதையாய் லாஸ்லியா நடத்திய புதிய போட்டோ ஷூட்.

0
1345

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் முகேன், தர்ஷன், லாஸ்லியா என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதில் மிகவும் பிரபலமடைந்தது என்னவோ லாஸ்லியா தான். இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட 24 மணி நேரத்திலேயே இவருக்கென்று பல ஆர்மி கூட துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் தான் மிகவும் லைட் ஆக இருந்து வந்தது.

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள்சென்று இருந்தார்.10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா. இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு கனடா நாட்டில் இவர் மாரடைப்பு காரணமாக இறந்து இருந்தார். இதனால் லாஸ்லியவிற்கு பலரும் ஆறுதல் கூறி வந்தனர். மேலும், லாஸ்லியா தந்தையின் மரணம் தற்கொலை என்று கூட வதந்திகள் பரவியது. ஆனால், அவர் இயற்கை மரணம் தான் அடைந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்து இருந்தர்கள்.

இதையும் பாருங்க : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நிரஞ்சனாவுக்கு திருமணம் – மாப்பிள்ளை யார்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.

- Advertisement -

ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாகவும், லாஸ்லியாவின் தந்தை வெளிநாட்டில் இறந்த காரணத்தாலும் அவரது உடல் லாஸ்லியாவின் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு வர தாமதமானது. இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மரியாநேசனின் உடல் இலங்கைக்கு கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி இருந்தனர். தனது தந்தையின் இழப்பால் பெரும் சோகத்தில் இருந்து வந்தார் லாஸ்லியா.

தந்தையின் இறப்பிற்கு பின்னர் சமூக வலைதளத்தில் கூட சற்று ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்த லாஸ்லியா, சம்பத்தில் பிக் பாஸ் 4 கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் லாஸ்லியா இரட்டை ஜடையில், வெள்ளை உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை லாஸ்லியாவின் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement