விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ புது முகங்களுக்கு தமிழ் சினிமாவில் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு பரிச்சயமில்லாத முகங்கள் கலந்து கொண்டார்கள். இதில் தர்ஷன் முகேன், லாஸ்லியா போன்ற பலரும் ரசிகர்களுக்கு புதுமுகமாக தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மூவருக்குமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது.
அதிலும் குறிப்பாக லாஸ்லியாவின் புகழ் கொடிகட்டி பறந்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்குபெற்ற முகேன் மற்றும் தரிசனை விட லாஸ்லியா தான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த படம் வெளியாகி இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றியடையவில்லை இருப்பினும் லாஸ்லியா அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் தற்போது இவர் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் லாஸ்லியா தன்னுடைய பிட்னஸ் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். இவர் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியதும் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார். ஆனால் சமீபகாலமாக இவர் மேலும் மேலும் ஸ்லிம் ஆகி கொண்டு வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் கோரியன் ட்ராமாவில் வரும் நாயகி போல இருக்கிறீர்கள் இதற்கு மேலும் ஒல்லியாக வேண்டாம் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.