கணவருடன் திருமண கோலத்தில் லாஸ்லியா.! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

0
18889

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இம்முறை பல்வேறு பரிட்சயமில்லா போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பரீட்சயமில்லாத போதும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார் லாஸ்லியா தான். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்.

லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : பிகில் திரைப்படம் குறித்து வெறித்தனமான மாஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்.! 

- Advertisement -

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் லாஸ்லியாவின் உண்மையான முகத்தை காண காத்திருக்கிறேன். எங்கள் பள்ளியில் அவர் தான் மிகவும் ஆபத்தானவர். அதற்கு ரசிகர் ஒருவர், உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டதற்கு, நானும் அவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அவருக்கு விவாகரத்து கூட ஆகிவிட்டது. ஆனால், அவரது உண்மை முகம் தெரியாமல் அவருக்கு ஆர்மியெல்லாம் ஆரம்பித்துள்ளனர் என்று பதில் கூறி ஷாக்கொடுத்துள்ளார் அந்த நபர்.

https://twitter.com/ReviewsBiggboss/status/1146643713981947905

இந்த நிலையில் லாஸ்லியா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இதனால் லாஸ்லியாவின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், அது மார்ப் செய்யப்பட்ட புகைப்படம் என்று பின்னர் தான் தெரியவந்தது.

-விளம்பரம்-
Advertisement