இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாராவா விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.
https://twitter.com/archanakalpathi/status/1142047041486381056
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் என்ற மகன் விஜயும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில் பிகில் படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதில், ‘டீசர், ட்ரெய்லர், சிங்கிள், ஆடியோ ரிலீஸ் தேதி, படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் கிடையாது. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். என்னவென்று யோசியுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது.





