நட்பா? காதலா ? கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.!

0
3777
Losliya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வனிதா வெளியேற்றபட்டார். வனிதா சென்றதற்கு பின்னர் அவருக்கு இணையாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக எந்த போட்டியாளர் வரப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அது பிரபல நடிகை சங்கீதாவாக இருக்கும் என்றும் சில தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. அதேபோல வைல்ட் கார்டு என்ட்ரியில் ஆல்யா மானஸா பெயரும் அடிபட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கவின், சாக்க்ஷி, லாஸ்லியா ஆகிய மூவருக்கு இடையில் நடந்த சாக்லேட் பஞ்சாயத்து, மீரா மிதுன் மற்றும் சாண்டியின் பஞ்சாயத்து தான் மிகவும் ஹைலைட்டாக இருந்தது. அதே போல நேற்று லாஸ்லியா, கவினை நினைத்து சேரன் மடியில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதார்.

- Advertisement -

கவின் லாஸ்லியவிடம் ஜொள்ளு விட்டு திரிவதால் கடுப்பான சாக்க்ஷி இனி என்னிடம் பேசாதே என்று கவினிடம் நேற்று கூறியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சாக்க்ஷி, கவினிடம் ‘நான் உன்னிடம் பிரின்ஸ்ஸாக மட்டும் தான் பழகினேனா’ என்று கேட்கிறார். அதற்கு கவின் என்ன கூறுகிறார் என்பதை பாருங்கள்.

இது ஒரு புறம் இருக்க இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ்திங்கள் கிழமை (ஜூலை 15) துவங்கியது. அதில் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர் இந்த வார எலிமினிஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்திற்கான ஓட்டிங் பிராஸஸ்சும் துவங்கிவிட்டது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement