பொய்யான காரணத்தை கூறி ஷெரினை நாமினேட் செய்த லாஸ்லியா.! ஆதாரம் இந்த குறும்படம் தான்.!

0
15585
losliya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 7 [போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இந்த வார நாமினேஷனில் கவின், லாஸ்லியா, முகென், அபிராமி மற்றும் மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேற்றய நிகழ்ச்சியில் ஷெரினை, லாஸ்லியா மட்டும் தான் நாமினேட் செய்திருந்தார். ஆனால், அதற்காக அவர் சொன்ன காரணம் தான் வேடிக்கையாக இருந்தது. சாக்க்ஷியிடம் இறுதியாக பேசாமல் இருந்த லாஸ்லியாவா இப்போது அவருக்காக ஷெரீனை நாமினேட் செய்துள்ளார் என்று ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருந்தது.

இதையும் பாருங்க : முதன் முறையாக தனது சகோதரர் பாபி சிம்ஹா குறித்து பேசியுள்ள ரேஷ்மா.! என்ன கூறியுள்ளார் பாருங்க.!

- Advertisement -

லாஸ்லியா, ஷேரினை நாமினேட் செய்ததற்கு சொன்ன காரணம், ஷெரினை, சாக்க்ஷி பயன்படுத்தினார் என்ற ஒரு விஷயம் வந்தது. ஆனால், அவரை பயன்படுத்தினரா என்று ஷெரின் சொல்லி இருந்தால் பரவா இல்லை. அதை விட்டு விட்டு இன்னொருவர் மூலமாக சொல்ல வைத்தது சரியாக படவில்லை. அந்த விஷயம் அனைவர் முன்பும் வந்த போது கூட அவர் (ஷெரின்) பெரிதாக ரியாக்ட் பண்ணவில்லை என்று கூறி இருந்தார்.

ஆனால், உண்மையில் சாக்க்ஷியிடம் தர்ஷன் சொன்ன விஷயம் ஷெரீனுக்கு தெரியவே தெரியாது. சாக்க்ஷி இறுதியாக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தர்ஷனிடம் பேசிய ஷெரின் நீ ஏன் சாக்க்ஷியை அப்படி சொன்ன என்று தான் கேட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அது மட்டுமில்லை சாக்க்ஷி வீட்டில் இருந்த வரை அவரை கண்டுகொள்ளாத லாஸ்லியா அவரை கடந்த வாரம் நாமினேட் கூட செய்திருந்தார். தற்போது அவருக்காக வருந்துவது போல ஷேரினை நாமினேட் செய்துள்ளார். ஆனால், இதற்கு முக்கிய காரணமே கவின், ஷெரினை அடிக்கடி புகழ்ந்து பேசுவதை லாஸ்லியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement