அவசியம் இல்ல – கவினுடன் உண்டான உறவு குறித்து முதன் முறையாக மனம் திறந்த லாஸ்லியா.

0
4756
kavin
- Advertisement -

அதோடு இந்த பிக் பாஸ் 3ல் நடந்த சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் பூகம்பமே கிளம்பியது. அதிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான். முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகத் தான் இருந்தார்கள். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் காதல் மலர்ந்தது. மேலும்,இதுவரை வந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலேயே கவின்,லாஸ்லியா காதல் வேற லெவல். தற்போது கூட இவர்கள் இருவரும் ‘காதல் காவியங்கள்’ என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும்,ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே “கவிலியா” என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இவர்கள் சம்பந்தமான புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள். எப்போவுமே நிகழ்ச்சியில் இருக்கும் வரை தான் காதல்,சண்டைகள் பற்றி பேசுவார்கள். ஆனால்,இந்த சீசன் காதல் மட்டும் தான் நிகழ்ச்சி முடிந்தும் ட்ரெண்டிங்கில் போய் கொண்டு இருந்தது.

- Advertisement -

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர். கவினும் சரி, லாஸ்லியாவும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேசியது இல்லை. அவ்வளவு ஏன் லாஸ்லியா தந்தையின் இறப்பிற்கு கூட கவின் ஒரு இரங்கல் பதிவை கூட தெரிவிக்கவில்லை, இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தான் கூவி வருகின்றனர்.

kavinlos

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கவின் குறித்து பேசியுள்ள லாஸ்லியா, எனக்கும் கவினுக்கும் இருப்பது பர்சனல். அதைவிட்டுவிட்டு என் படத்தை பற்றி கேளுங்கள். மேலும், எனக்கும் கவினுக்கும் இருப்பது என்ன என்பதை பற்றி சொல்ல எனக்கு அவசியமும் இல்லை. மேலும், தர்ஷனை அண்ணன் என்று சொல்லிவிட்டு இப்போது அவருடன் ஜோடியாக நடிப்பது குறித்து பேசியுள்ள லாஸ்லியா, அது பெர்சனல் லைப், இது சினிமா. இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டு இருவரும் வெளியில் வரப்போகிறோம் அவ்ளோ தான் என்று கூறியுள்ளார் லாஸ்லியா.

-விளம்பரம்-
Advertisement