கரோனா வைரஸ் குறித்து லாஸ்லியா பதிவிட்ட கருத்து. வைரலாகும் புகைப்படம்..

0
10142
losliya
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் இவர்களுடைய காதல் குறித்து இன்னும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு தான் வருகிறது.

-விளம்பரம்-

ரசிகர்கள் பலரும் இவர்கள் காதல் குறித்து ஆவலாக எதிர்நோக்கி வந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்தே. ஆனால், இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரவர் வேலைகளை பார்த்து வருகின்றனர். தற்போது லாஸ்லியா அவர்கள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க்கு ஜோடியாக “ஃப்ரெண்ஷிப்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

- Advertisement -

மேலும், ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர். இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் ஆல்பர்ட் ராஜா இயக்கும் புது படத்தில் நடிகர் ஆரி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாஸ்லியா நடிக்கிறார்.

இந்த இரு படங்களிலும் லாஸ்லியாவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இந்த கரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர அச்சுறுத்தல் விஷயமாக இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

Please stay safe ??

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கவலையில் உள்ளார்கள். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இந்த கரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் அவர் “Please stay safe” என்ற கருத்தையும், ஃபேஸ் மாஸ்க் அணிந்து இருக்கும் புகைப்படத்தையும் லாஸ்லியா பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement