இவளுக்கு எதுக்கு அவார்ட்? சொல்லி வைத்தது போல லாஸ்லியாவை ஒரே மாதிரி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
41506
losliya

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஆண்டு தான் திருவிழா போன்று கோலாகலமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட வேற லெவல் என்று சொல்லலாம். அதிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான். முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகத் தொடங்கி காதலர்களாக வலம் வந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் இவர்களுடைய காதல் குறித்து இன்னும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு தான் வருகிறது. ரசிகர்கள் பலரும் இவர்கள் காதல் குறித்து ஆவலாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினும், லாஸ்லியாவும் தங்களுடைய காதல் குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனாலே கவிலியா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் லாஸ்லியாவை ஃபாலோ செய்து வருகிறார்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா அவர்கள் பல போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார். போட்டோ ஷூட் போது எடுத்த புகைப்படங்களை அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு ‘பியூட்டி குயின் ஆஃப் தி இயர்’ என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது விருது வாங்கிய லாஸ்லியா அவர்கள் மேடையில் கூறியது, இது என்னுடைய குணத்திற்காக தந்த விருதாக எடுத்துக் கொள்கிறேன்.

- Advertisement -

இது பல பேருக்குப் பிடிக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், இந்த விருது எனக்கு பிடிச்சிருக்கு. நான் முதல்ல என்னையே எனக்கு பிடிக்கவே பிடிக்காது. பிறகு நாட்கள் செல்லச் செல்ல தான் நான் என்னை காதலிக்க ஆரம்பித்தேன். நம்மை நாம் காதலிக்க தொடங்கினால் எதையும் சாதிக்கலாம். அதனால் அனைவரும் முதலில் அவர் அவர்களை காதலிக்க தொடங்குங்கள் பிறகு அடுத்தவர்களை காதலியுங்கள் என்று கூறியிருந்தார். அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த வீடியோவிற்கு கீழ் சொல்லி வைத்தது போல அனைவரும் ”தற்போது லாஸ்லியா தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் தமிழ் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் ஃப்ரெண்ஷிப் படத்தில் லாஸ்லியா, ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர். இதனைத்தொடர்ந்து இயக்குனர் ஆல்பர்ட் ராஜா இயக்கும் புது படத்தில் நடிகர் ஆரி நாயகனாக நடிக்கிறார்.

Advertisement