விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரை குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இருந்தும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் என்ன ஆனது? என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு கவின் விளக்கம் கொடுத்து இருந்தார். அதில் அவர் நான் சிங்கிள் தான், எனக்கான காதலை தேடி கொண்டு இருக்கிறேன், கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். இதன் மூலம் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது உறுதி ஆகி விட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.
லாஸ்லியா திரைப்பயணம்:
அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார். அதன் பின்னர் இவர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், ஆரியுடனான படத்திற்கு முன்பாகவே ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இந்த படத்தை இயக்கி உள்ளனர். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தும் லாஸ்லியாவின் முதல் திரைப்படம் வெற்றி படமாக அமைய வில்லை.
கூகுள் குட்டப்பன் படம்:
இருப்பினும் இவர் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நாயகியாக நடித்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது லாஸ்லியா அவர்கள் ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். நடிகர் அஸ்வின் உடன் தான் லாஸ்லியா சேர்ந்து நடனமாடியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இவர் இதற்கு முன்பே சீரியல்கள், படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ஆல்பம் சாங், வெப்சீரிஸ் என்று பிசியாக நடித்து வருகிறார்.
அஸ்வின் மற்றும் லாஸ்லியா ஆல்பம் பாடல்:
இதனை தொடர்ந்து தற்போது அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து sugar baby என்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் லாஸ்லியா, அஸ்வின் இருவரும் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்கள். Blesso Beauty soap என்ற விளம்பரத்தில் இருவருமே நடித்திருந்தார்கள். இது தான் லாஸ்லியாவின் முதல் விளம்பரம் என்பது குறிபிடத்தக்கது. தற்போது மீண்டும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் லாஸ்லியா பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
லாஸ்லியா அளித்த பேட்டி:
அதில் அவரிடம் அடுல்ட் படம் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அவர், நான் ஸ்கூல் படிக்கும் போது எல்லோரும் சுற்றி நின்று போனில் அந்த மாதிரி படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். நானும் அவளுடன் சேர்ந்து அந்த படத்தை பார்த்து இருக்கிறேன். என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான். அதுவும் ஒன் சைட் காதல். அந்த பையனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. முதல் முத்தம் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப் இருந்தபோது அவன் எனக்கு முத்தம் கொடுத்தான் என்று பல சுவாரசியமான விஷயங்களை லாஸ்லியா கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.