‘நயந்தாரா கூட தன்மையா தான் இருகாங்க’ – தந்தை குறித்த கேள்விக்கு லாஸ்லியா அளித்த பதிலால் கடுப்பான ரசிகர்கள்.

0
19820

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்றுள்ளது.

லாஸ்லியாவின் தந்தை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு கனடா நாட்டில் இவர் மாரடைப்பு காரணமாக இறந்து இருந்தார். மேலும், லாஸ்லியா தந்தையின் மரணம் தற்கொலை என்று கூட வதந்திகள் பரவியது. ஆனால், அவர் இயற்கை மரணம் தான் அடைந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்து இருந்தர்கள்.

இதையும் பாருங்க : மகனுக்கு Christening விழாவை கொண்டாடிய சாண்டி – அப்படினா என்ன தெரியும்ல. வைரல் புகைப்படங்கள்

- Advertisement -

லாஸ்லியாவின் தந்தை வெளிநாட்டில் இறந்த காரணத்தாலும் அவரது உடல் லாஸ்லியாவின் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு வர தாமதமானது. இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மரியாநேசனின் உடல் இலங்கைக்கு கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி கொண்டு வரப்பட்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரான்ட்ஷிப் படத்தை பார்த்துவிட்டு பின்னர் பத்திரிகையாளரை சந்தித்த லாஸ்லியாவிடம் தந்தை குறித்து கேட்கப்பட்டதற்கு ‘அந்த கேள்விய ஸ்கிப் பண்ணுங்க’ என்று கூறிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ பலரும் ஓவர் ஸீன், ஓவர் ATTITUDE என்று திட்டி தீர்த்து வருகின்றனர். ஒரு சிலரோ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட தன்மையா தான் இருக்காங்க. ஆனால் நீ புதுமுகமா வந்துட்டு இவ்ளோ சீன் போடற என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement