பேமிலி மேன் போன்ற ஈழப் பிரச்சனை குறித்த படங்களில் நடிக்க மாட்டேன் – லாஸ்லியா சொன்ன காரணம்.

0
2038
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ புது முகங்களுக்கு தமிழ் சினிமாவில் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு பரிச்சயமில்லாத முகங்கள் கலந்து கொண்டார்கள். அதில் இலங்கையில் இருந்து வந்த லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவருக்கு கிடைத்த பிக் பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

-விளம்பரம்-

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார். இன்று தான் இவர் நடித்த பிரண்ட்ஷிப் படம் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லாஸ்லியாவிடம், மேதகு, ஃபேமிலிமேன் போன்ற ஈழம் பிரச்சனை குறித்த படங்களில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் பாருங்க : அட, இன்று வெளியான விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதியின் இயக்குனர் இந்த பிரபல நடிகரின் மகனா.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த லாஸ்லியா, அங்கேயே பிறந்து வளர்ந்ததினால் அங்கே என்ன நடந்தது என்று எனக்கு நன்றாக தெரியும் என்பதால் ஈழம் தொடர்பான கதைகளில் நிச்சயம் நடிக்கமாட்டேன். மற்றவர்களுக்கு அதற்கான தெளிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இலங்கையில் இருக்கும் அனைவருக்குமே அங்கே என்ன நிகழ்ந்தது என்பது தெரியும் என்பதால் அப்படிப்பட்ட படங்களில் என்னால் நடிக்க முடியாது.

Bigg Boss' Tamil fame Losliya  marriage rumours | The News Minute

சிலர் ஈழப்பிரச்சினை குறித்து படம் எடுத்துவிட்டு இதை நாங்கள் ஒரு படமாகத்தான் எடுத்திருக்கிறோம் என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அங்கே நிகழ்ந்த விஷயங்கள், பார்த்த விஷயங்கள் எல்லாம் மிகவும் கொடுமையானவை அப்படியான விஷயங்கள் இல்லாத படங்களில் என்னால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் லாஸ்லியா.

-விளம்பரம்-
Advertisement