தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் அனபெல் சேதுபதி. கடந்த வாரம் தான் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த லாபம் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து இன்று விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் அனபெல் சேதுபதி. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் கதையை மையமாகக் கொண்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் குறித்து பல சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் இயக்குனர் மற்றும் நடிகரான ஆர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் தான் அனபெல்லா சேதுபதி படத்தின் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்.1982 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான பயணங்கள் முடிவதில்லை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஆர் சுந்தர்ராஜன். இந்த படத்தில் மோகன், பூர்ணிமா பாக்யராஜ் இணைந்து நடித்து இருந்தனர்.
இந்த படம் 365 நாட்கள் ஓடி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. தான் இயக்கிய முதல் படத்திலேயே மிகப்பெரிய சாதனையை கண்டவர் ஆர் சுந்தர்ராஜன். அதுமட்டுமில்லாமல் இவர் அதிகமாக மோகனை வைத்துதான் படங்கள் இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே வெற்றி தான். விஜய்காந்த், ரஜினி, விஜய் போன்று தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை தந்துள்ளார். இவர் இதுவரை 24 படங்கள் இயக்கியுள்ளார். கடைசியாக இவர் 2013ம் ஆண்டு நிலாச்சோறு என்ற படத்தை இயக்கி இருந்தார்.
மேலும், இயக்குநர் சுந்தரராஜனுக்கு இரு மகன்கள் உள்ளனர். அசோக் கார்த்திக், தீபக் சுந்தர்ராஜன் ஆவார். தற்போது சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் அவர்கள் தான் விஜய் சேதுபதியை வைத்து அனபெல்லா சேதுபதி படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் டாப்ஸி, ராதிகா, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் எந்த அளவிற்கு வெற்றி அடையும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கணும்