லாஸ்லியா இப்படி ஒரு கேமரா பைத்தியமா.! விடியோவை பகிர்ந்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

0
7050
losliya

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே இளசுகளின் பேவரைட் என்று ஒருவர் இருக்கத்தான் செய்கின்றனர். முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா என்று இளம் பெண் போட்டியாளர்கள் தான் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தனர். அதே போல இந்த சீஸனின் ஆரம்பத்தில் லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தார்.

ஆனால், கடந்த சில நாட்களாக இவரது பெயரை இவரே டேமேஜ் செய்து கொண்டு வருகிறார். வடிவேலு பற்றி நக்கலாக நினைத்தது, ஜெயில் டாஸ்கில் ஓவராக செய்தது என்று இப்படி எத்தனையோ காரணத்தால் ரசிகர்கள் சிலர் இவரை வெறுத்து ஒதுக்கி வருகின்றனர்.

இதையும் பாருங்க : கஸ்தூரியை வனிதாவுடன் ஒப்பிட்ட அபி.! வனிதாவின் ரியாக்க்ஷனை பாருங்க.!

- Advertisement -

அதிலும் கடந்த வாரம் சாக்க்ஷி மற்றும் கவின் விஷயத்தில் இவர் நடந்து கொண்ட விதத்தால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதே போல இவருக்கு நடனமாடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது என்றும் இவரை வெறுப்பவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் லாஸ்லியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாஸ்லியா வழக்கம் போல மற்ற போட்டியாளர்களுடன் காலையில் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது முதலில் பின் வரிசையில் ஆடிக்கொண்டிருந்த லாஸ்லியா கேமராவில் தனது முகம் தெரிய வேண்டும் என்று ஓடிவந்து கேமரா முன் ஆடினார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் லாஸ்லியா சரியான கேமரா பைத்தியம் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement