பிக் பாஸிற்கு பின் சாண்டியின் நடன பள்ளியில் செம குத்தாட்டம் போட்ட லாஸ்.! வைரலாகும் வீடியோ.!

0
10045
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமையுடன் (அக்டோபர் 6) நிறுவடைந்தது. 16 போட்டியாலர்கள் கலந்த கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 வெளியேற்றபட்ட நிலையில் முகென்,சாண்டி,லாஸ்லியா, ஷெரின் என்று 4 போட்டியாளர்கள் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த சீசனில் வெளிநாட்டில் இருந்து மூன்று போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த முகென் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷனும் அதில் அடக்கம்.

-விளம்பரம்-
Image result for losliya dance

இதில் லாஸ்லியா பல்வேறு இளசுகளின் உள்ளதை கொலைகொண்டார். இவரது அழகான தோற்றம் காரணமாக இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்திலேயே இவருக்கு சமூகவலைதளத்தில் ஆர்மிக்கால் கூட உருவானது. ஆரம்பத்தில் யாரிடமும் அவ்வளவாக பேசாத லாஸ்லியா ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது உண்மையான குணம் வெளியே வரத் தொடங்கியது. பிக்பாஸ் வீட்டில் இவர் சேரனை தனது தந்தையை போல பாவித்து நடந்து வந்தார். மேலும், சேரனுக்கு அடுத்தபடியாக கவினிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார்.

இதையும் பாருங்க : அங்காடி தெரு பட நடிகரா இது.! என்ன இப்படி மாறிட்டாரு.! பாத்தா ஷாக்காவீங்க.!

- Advertisement -

இறுதி போட்டியில் இவர் கண்டிப்பாக பிடிக்கவில்லை என்றாலும் இரண்டாவது இடத்தை பிடித்து விடுவார் என்று இவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் மூன்றாம் இடத்தை பிடித்தார். இருப்பினும் இவர் இறுதி போட்டி வரை தகுதி வெற்றியாக தான் பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியலர்களை சந்தித்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் லாஸ்லியா, சாண்டியின் நடன பள்ளிக்கு சென்றுள்ளார்.

லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது இவரது நடனம் தான் பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தாலும் காலையில் எழுந்தவுடன் கேமரா முன்னால் வந்து நடனமாடுவதை எப்போதும் மறந்ததே கிடையாது. இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஏற்பட்டது என்றும் கூறலாம். அதிலும் பிக்பாஸ் வீட்டில் அவரது நடன பார்ட்னர் சாண்டிதான். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய லாஸ்லியா சாண்டியின் நடன பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கே சாண்டி குழுவுடன் சினிமா பாடல்களுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் லாஸ்லியா இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இது ஒருபுறமிருக்க பிக் பாஸுக்கு பின்னர் லாஸ்லியாவிற்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வர இருப்பதாக மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் ,விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி வந்த ராஜா ராணி தொடரின் இரண்டாவது பாகத்தில் லாஸ்லியா நடிக்கப்போவதாக சில செய்திகளும் வைரலாக பரவி வந்தது. மேலும்,அந்த தொடரில் கவின் கதாநாயகனாக நடிப்பார் என்று கூறப்பட்டது. விரைவில் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோலலாஸ்லியா விரைவில் சினிமாவில் தோன்றுவார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement