அங்காடி தெரு பட நடிகரா இது.! என்ன இப்படி மாறிட்டாரு.! பாத்தா ஷாக்காவீங்க.!

0
43057
angadi-theru
- Advertisement -

தமிழ் திரையரங்குகளில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ‘அங்காடித்தெரு’ படத்தில் ஹீரோவாக நடித்த மகேஷ் அவர்கள் தற்போது திருநங்கையாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகின்றன .மேலும், இது குறித்து இணையங்களில் கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்தும் வருகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த அங்காடி தெரு படத்தில் நடிகர் மகேஷ், நடிகை அஞ்சலி ஆகியோர்களின் நடிப்பில் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக தந்தது.இப்போகூட அங்காடி தெருவில் வரும் பாடல் எங்கு கேட்டாலும் ரசிகர்கள் மனதில் சந்தோசம் பொங்கும்.

-விளம்பரம்-

ஒரு கிராமத்திலிருந்து வந்து சென்னை என்ற ஒரு பெரிய நகரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்க்கிற கதாபாத்திரத்தில் மகேஷ் நடித்திருந்தார். மேலும் அந்த ஜவுளி கடையில் வரும் கஷ்டங்களையும், அவஸ்தைகளையும் உண்மையாக இந்த படத்தில் கூறியிருக்கிறார் இயக்குனர். ஆனால், இந்த படம் பெரிய அளவு வெற்றியை தந்தாலும் மகேஷுக்கு சினிமாத்துறையில் மேன்மேலும் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும், ஒரு சில படங்களில் நடித்திருந்தார். பின்னர் நீண்ட நாட்களுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அங்காடித்தெரு மகேஷ் அவர்களுக்கு தற்போது “தேனாம்பேட்டை” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிச்சுவாகத்தி படத்தில் நடித்த நடிகை அனுஷா நடிக்கிறார்.

இதையும் பாருங்க : சென்னையில் உள்ள பிரபல மாலுக்கு சென்ற முகென்.! சூழ்ந்த பெண் ரசிகைகள்.! வைரலாகும் வீடியோ.!

- Advertisement -

இவர்களுடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ். பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சி.டி.கணேசன், ராஜசிம்மன் உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்த படத்தை கிராண்ட் சர்வீஸ் மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.மேலும், இந்த படத்திற்கு கதை,திரைக்கதை, வசனம்எழுதி இயக்குவது எம்.சித்திக்.இந்த படத்திற்கு முனீஸ் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீசாய் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்து உள்ளார்கள். சண்டை பயிற்சி காட்சிகளெல்லாம் எஸ். ஆர். முருகன் பணியாற்றியுள்ளார் இந்த படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராக நடித்துள்ளார். அது மட்டும் இல்லைங்க பெண் கதாபாத்திரத்தில், அதாவது திருநங்கை வேடத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா துறையில் பல முன்னணி நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்துள்ளார்கள்.அதில் ரஜினி ,சத்யராஜ், சரத்குமார், விக்ரம் எனப் பலரும் நடித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது தேனாம்பேட்டை மகேஷ் அவர்களும் பெண் வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படத்திற்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கபட்டதாகவும், இந்த பூஜையில் பாக்கியராஜ் உட்பட முக்கியமான சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளன. மேலும், காஞ்சனா சரத்குமார்,சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதி இவர்களின் வரிசையில் தேனாம்பேட்டை மகேஷ் திருநங்கை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்து பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர் ரசிகர்கள்.

-விளம்பரம்-

இந்த படம் குறித்து இயக்குனர் சித்திக் அவர்கள் கூறியது,இந்த படத்தில் மகேஷ் கதாபாத்திரம் எல்லாவற்றிற்கும் பயப்படுவதும், அனைவரிடமும் அடி வாங்குவதும் ஆகும். மேலும், மகேஷ் தன் தந்தையிடம் எப்போதும் திட்டி வாங்கிக்கொண்டும் , அடிவாங்கி கொண்டே இருப்பார். உண்மையிலே மகேஷ் ஏன் இப்படி அடி திட்டு வாங்குகிறார் ? வாலிப இளைஞராக இருக்கும் மகேஷ் எப்படி? திருநங்கையாக மாறுகிறார் என்பதுதான் கதை.

Advertisement