‘பொய்கள் நிறைந்த உலகம்’ இணையத்தால் உலா வந்த சர்ச்சை வீடியோ. மறைமுகமாக பதில் அளித்த லாஸ்லியா.

0
18724
losliya

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் லாஸ்லியா மிகவும் முக்கியமான நபர் ஆவார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, தனது நண்பர் ஒருவர் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு ஏகப்பட்ட பிரபலம் ஏற்பட துவங்கியது.

https://www.instagram.com/p/B-W9IpCp98d/

சொல்லப்போனால் ஓவியா, யாஷிகாவிற்கு பின்னர் சமூக வளைதளத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் என்றால் அது லாஸ்லியாவிற்கு தான் என்றும் சொல்லலாம். தற்போது லாஸ்லியா தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் பிரின்ட்ஷிப் என்ற படத்தில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார் என்ற தகவல் அதிகார பூர்வமாக வெளியாகி உள்ளது. மேலும், ஆரியுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் லாஸ்லியா. இப்படி இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வரும் லாஸ்லியாவின் பெயர் கடந்த இரு தினங்களாக படும் டேமேஜ் ஆகி வந்தது.

-விளம்பரம்-

அது என்னவெனில் நடிகை லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்திருக்கிறார் என்று வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது தான் உண்மை. இது தெரியாமல் பலரும் அந்த வீடியோவில் இருப்பது நான் தான் என்று சமூக வலைத்தளத்தில் அதிகம் பரப்பி வந்தார்கள். மேலும், இது குறித்து பல்வேறு மீம்களும் வெளியானதால் லாஸ்லியாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் லாஸ்லியா பதிவிட்டுள்ள பதிவு ஒன்று இந்த வதந்திக்கு பதிலளிக்கும் விதமாக இருக்கிறது. பொய்கள் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு என்று ஒரு சில விஷயங்கள் இருக்கிறது. ஆனால், ஒருகட்டத்தில் நம்மிடம் இருக்கும் ஒரு உன்னதமான ஆத்மாதான் இறுதி வரை கூட இருக்கும் என்பதை புரிந்து கொள்வோம். இந்த உலகம் முழுக்க பயமும் எதிர்மறையான கருத்துக்களும் மற்றவர்களை மதிப்பிடுவதில் தான் அதிகமாக இருக்கிறது.

இது போன்ற மக்கள் அனைவரும் சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். லாஸ்லியாவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் கவலைப்படாதீர்கள். அது பொய் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் யார் என்பதும் எங்களுக்கு தெரியும் எது எப்படி இருந்தாலும் எங்கள் அன்பு எப்போதும் உங்களுக்கு இருக்கிறது என்று லாஸ்லியா விற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்

Advertisement