கவினுடன் உண்டான காதலை முறித்துக்கொண்டாரா லாஸ்லியா ? – அவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு இதோ.

0
45182
kavinlos
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் லாஸ்லியா மிகவும் முக்கியமான நபர் ஆவார். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருந்த நிலையில் இவர் கவினுடன் செய்த ரொமான்ஸ்சால் கவின் ரசிகர்களின் ஆதரவும் கிடைத்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதை தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதனால் ரசிகர்கள் கவிலியா – கவின்லாஸ்லியா போன்ற பக்கங்களை எல்லாம் ஆரம்பித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னராவது இவர்கள் இருவரும் காதல் குறித்து மனம் திறப்பார்கள் என்று எதிர் பார்த்தனர். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவரின் எங்கும் வாய் திறக்காமல் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால், இவர்களது ரசிகர்கள் இன்னமும் இவர்கள் காதலித்து வருவதாக தான் நினைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடி முன் நின்றபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும்” என்று பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து லாஸ்லியா, இதே போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, “வாழ்க்கை உங்களுக்கு எதாவது கற்பிக்க நினைக்கிறது. அதனால் உங்களை கண்ணாடியில் பார்த்து அதை சரி செய்துக் கொள்ள முயற்சியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து லாஸ்லியா – கவினுக்காக தான் அப்படி ஒரு புகைப்படத்தை பதிவிட்டார் என்று கவிலியா ரசிகர்கள் குஷியில் இருந்த நிலையில் தற்போது லாஸ்லியா இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் “அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன், முதலில் இது எனது இன்ஸ்டாகிராம், இதுல நான் போடுற தலைப்புகள் அல்லது புகைப்படங்கள் எல்லாம் என்னை பத்தினது “என்னைப் பற்றி மட்டுமே”. என்பதை புரிந்து கொள்ளுங்கள். “

-விளம்பரம்-

நான் பின்னால் பேச விரும்பவில்லை. எனவே நீங்கள் எதையும் பற்றி பேச விரும்பினால், நாங்கள் எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமையைப் பற்றி பேசுங்கள். நன்றி. தயவுசெய்து இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். லாஸ்லியாவின் இந்த பதிவால் கவின் – லாஸ்லியா ரசிகர்கள் பலரும் ஷாக் அடைந்து உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் தங்களது காதல் குறித்தும் திருணம் குறித்தும் அறிவிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் இணைந்து ஒரு புகைப்படத்தை கூட வெளியிடவில்லை. அவரவர் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

Advertisement