கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் சிறந்து விளங்கிய மூன்று போட்டியாளர்களை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். இதில் எனவே, இவர்கள் மூவரும் அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்றய எபிசோடில் அடுத்த வார தலைவர் பதவிக்கான போட்டி ஒன்றும் வைக்கப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூவரின் கண்களும் கட்டப்பட்டு அவர்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பலகை ஒன்றில் captain என்ற வாரத்தை அடங்கிய பொத்தான்களும் வைக்கப்பட்டு இருந்தது.
இதையும் பாருங்க : அப்பா மகள் உறவில் ஏற்பட்ட விரிசல்.! லாஸ்லிவாவை முதன் முறையாக கத்திய சேரன்.!
இதில் யார் captain என்ற வார்த்தையை விரைவில் பொறுத்துகிறார்களோ. அவர்கள் அடுத்த வார தலைவராக வெற்றி பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்கில் மதுமிதா சிறப்பாக விளையாடி கேப்டன் பதிவியை கைப்பற்றினார்.
ஆனால், இந்த டாஸ்கில் மதுமிதா நன்றாக கண்களை பயன்படுத்தி தான் விளையாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தர்ஷன் மற்றும் ஷெரின் இருவரும் கயிற்றை பிடித்துக்கொண்டு நடந்து சென்று ஒவ்வொரு எழுத்தையும் பொறுத்த கஷ்டப்பட்டிருக்கும் போது மதுமிதா நன்றாக பார்த்து சுலபாக எழுத்துக்களை பொறுத்தியது இந்த வீடியோ மூலம் நன்றாக தெரிகிறது. இதிலிருந்தே அவர் ஏமாற்றி விளையாடியது அப்பட்டமாக தெரிகிறது.