மதுமிதா ஏன் இறுதி போட்டிக்கு வரவில்லை.! வீடியோ மூலம் பதிலளித்த மதுமிதாவின் கணவர்.!

0
5867
madhu

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பரபரப்பையும் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருந்த பிக் பாஸ் சீசன் 3 கடந்த ஞாயிற்று கிழமை மிகவும் கோலாகளமாக நிறைவடைந்தது இந்த சீசனில் முகென் முதல் இடத்தையும் சாண்டி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் ஜாங்கிரி மதுமிதா பிக் பாஸ் சீசன் 3 இல் டைட்டிலை வெல்லும் அளவிற்கு மக்களிடையே ஆதரவையும் அன்பையும் பெற்று இருந்தவர்.ஆனால், சில வாரங்களுக்கு முன்னால் பிக் பாஸ் வீட்டின் போட்டியாளராக இருந்த ஜாங்கிரி மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

This image has an empty alt attribute; its file name is image-59.png

இதுகுறித்து பல வீடியோக்களும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. அவரிடம் கேட்டபோது என்னை வீட்டிலுள்ள எட்டு பேரும் குரூப் ராகிங் செய்து என்னை கொடுமைப் படுத்தினார்கள் என்றும், மன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் நான் கையை அறுத்துக் கொண்டேன் என்று கூறினார். மேலும், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மதுமிதா அன்றைக்கு நான் செய்தியாளர்களிடம் சந்திப்பில் பேசிய அனைத்து விஷயங்களும் உண்மைதான். ஆனால் என்ன பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் மன உளைச்சல் தான், ஆனால் எனக்கு வழக்கமாக ஏற்படும் மன உளைச்சலுடன் அதிகமாக ஏற்பட்டது. மேலும், வெளியே வந்து 20 நாட்கள் அந்த மன உளைச்சல் அதிகம் இருந்தது. அதனால்தான் மக்களிடம் பேசப்போகிறேன் என்று சொன்னவுடன் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டுப் பேசினேன் என்றும் கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : முகெனின் சத்தியமா பாடலின் லைவ் பேர்பாமென்ஸ்.! மெய்மறந்து ரசித்த ரஹ்மான்.! வீடியோ இதோ.!

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் இறுதி போட்டி மிகவும் கோலாகாலமாக நிறைவடைந்தது. இந்த இறுதி போட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்களும் அவர்களது குடுப்பதினரும் கலந்து கொண்டனர். ஆனால், சரவணன் மற்றும் மதுமிதா இருவரும் பங்குபெறவில்லை. ஆனால், மதுமிதா மற்றும் சரவணன் மட்டும் பங்குபெறவில்லை. ஆனால், இறுதி போட்டியில் யாஷிகா ஆனந்த் ஆடி முடித்த பின்னர் மதுமிதாவின் கணவர் ஒரு சில நொடிகள் கேராவில் காண்பிக்கபட்டிருந்தார். ஆனால், உண்மையில் மதுமிதாவின் கணவர் இறுதி போட்டிக்கு செல்லவே இல்லை என்றும் மதுமிதா கணவர் கேமராவில் பதிவாகி இருந்த அந்த காட்சிகள் மதுமிதா வெளியேற்றத்தில் போது எடுக்க பட்டது என்றும் தெரியவந்துள்ளது. அந்த விடியோவை இறுதி போட்டியில் இணைத்து மதுமிதாவின் கணவர் இறுதி போட்டிக்கு வந்தது போல விஜய் டிவி பித்தலாட்டம் செய்துள்ளது. இதனை மதுமிதாவின் கணவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். விஜய் டிவியின் இந்த செயல் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கபட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் இறுதி போட்டியில் கலந்து கொண்டது போல விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியது குறித்து மதுமிதாவின் கணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸில் நானும் எனது குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் எங்களை யாரும் அழைக்கவில்லை. ஆனால், சமீபத்தில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸிஸ் நான் கலந்து கொண்டது போல ஒரு காட்சியை போட்டுள்ளார்கள். அதனை கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது மிகவும் தவறு, எதற்காக அவர்கள் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. இதற்கான விளக்கத்தை அவர்கள் கண்டிப்பாக கூற வேண்டும் என்று கூறியுள்ளார் மதுமிதாவின் கணவர் மோசஸ்,

இது ஒரு புறம் இருக்க, மதுமிதா விஷயத்தில் அன்று வீட்டில் இருந்த சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அனைவரும் சம்மந்தபட்டவர்கள் தான் என்று பல குற்றச்சாட்டுகள் வலுத்தது. இந்த நிலையில் மதுமிதா விஷயத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்பில் புகார் பதிவாகியுள்ளதாக. மனித உரிமை அமைப்பை சேர்ந்த விஜயலக்ஷ்மி தேவராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே, மதுமிதா விஷயத்தில் விரைவில் அந்த 8 நபர்களிடம் மனித உரிமை அமைப்பு விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.