மதுமிதாவுக்கு முதன் முறையாக ட்வீட் போட்ட போட்டியாளர்.. அதுவும் இவர் போட்டிருக்காரே.. குவியும் பாராட்டு..

0
81534
Madhumitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதில் மிக முக்கியமான விஷயம் என்றால் மதுமிதா தற்கொலைக்கு முயன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது தான். இந்த சீசன் ஆரம்பித்த போது பிக் பாஸ் வீட்டில் முதல் சண்டையாக வெடித்தது அபிராமி மற்றும் மதுமிதா விஷயம்தான். பாட்டில் குழந்தை விவகாரத்தில் மதுமிதா அபிராமியை பற்றி பேச அபிராமிக்கு ஆதரவாக சாக்க்ஷி மற்றும் ஷெரின் இருவரும் மதுமிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்போது மதுமிதா தமிழ் கலாச்சாரம் என்ற வார்த்தையை விட்டுவிட சாக்ஷி மற்றும் ஷெரின் இருவருமே மதுமிதாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

-விளம்பரம்-

அதேபோல மதுமிதா வெளியேறியபோது சாக்க்ஷியின் நெருங்கியதோழியான ஷெரின் தான் மதுமிதாவை வார்த்தைகளால் புண்படுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேறிய போது சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர வேறு யாரிடமும் பேச நான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அப்போது வீட்டில் இருந்த 8 பேர் மீதும் மதுமிதா வழக்கு தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. மேலும் மதுமிதா விஷயத்தில் மனித உரிமை கமிஷன் அந்த எட்டு பேர் மீதும் வழக்கு தொடர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதையும் பாருங்க : ஜெய் சங்கர் மகன் யாருனு தெரியுமா ? அஜித்துக்கும் அவருக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு..

- Advertisement -

மேலும், இறுதிப் போட்டிக்கு மதுமிதாவின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை இருப்பினும் மதுமிதா கணவர் பிக்பாஸில் இறுதிப்போட்டிக்கு வந்தது போல விஜய் தொலைகாட்சி போலியான ஒரு வீடியோவை இணைத்து ஒளிபரப்பியது. இதனால் விஜய் டிவியை கேள்வி கேட்டு மதுமிதாவின் கணவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுமிதா விஷயத்தில் ரசிகர்கள் பலரும் விஜய் டீவிக்கு எதிராகத்தான் இருந்து வருகிறார்கள். அதேபோல மதுமிதாவின் தற்கொலைக்கு அந்த 8 பேர் தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்து வந்தன.ர் மேலும் இத்தனை விஷயங்கள் நடந்தும் மதுமிதா குறித்து யாருமே இன்னமும் வாய் திறக்காதது ரசிகர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவ்வளவு ஏன் மதுமிதாவுக்கு ஆதரவாக இருந்த சேரன் கூட மதுமிதா குறித்து எந்த ஒரு பதிவையும் போடவில்லை. இந்த நிலையில் மதுமிதாவின் ட்விட்டர் பதிவுக்கு ஆதரவாக முதன் முறையாக சாக்க்ஷி தற்போது ட்வீட் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Image

அது வேறு ஒன்றுமில்லை தற்போது மதுமிதா மற்றும் சாக்க்ஷி இருவரும் ஒன்றாக ஜிவி பிரகாஷின் படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காகத்தான் மதுமிதாவுக்கு சாக்க்ஷி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் தற்போது எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் தொடங்கி மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் எழில். விஜய், அஜித் தொடங்கி சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட இளம் நடிகர்கள் வரை பலரை வைத்து படம் இயக்கியவர் எழில் தற்போது ஜி.வி.பிரகாஷுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தினை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-
Image result for madhumitha sakshi

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை 6 மணிக்கு நடிகர் சித்தார்த் வெளியிட்டிருந்தார். மேலும், இந்த படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்த மதுமிதா, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நானும் இருப்பது மிக்க மகிழ்ச்சி, இந்த படம் மாபெரும் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார். மதுமிதாவின் இந்த பதிவிற்கு ரீ -ட்வீட் செய்துள்ள சாக்க்ஷி , உங்கள் டீவீட்டை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுளளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மதுமிதாவவின் டீவீட்டிற்கு ரிப்ளை செய்த முதல் போட்டியாளர் சாக்க்ஷி தான். எனவே, சாக்க்ஷிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement