அன்னிக்கு உணர்ச்சி வசபட்டுவிட்டேன்.! மதுமிதா வெளியிட்ட புதிய ஷாக்கிங் வீடியோ.!

0
16575
madhu

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பரபரப்பையும் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள பிக் பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளது.அதில் ஜாங்கிரி மதுமிதா பிக் பாஸ் சீசன் 3 இல் டைட்டிலை வெல்லும் அளவிற்கு மக்களிடையே ஆதரவையும் அன்பையும் பெற்று இருந்தவர்.ஆனால், சில வாரங்களுக்கு முன்னால் பிக் பாஸ் வீட்டின் போட்டியாளராக இருந்த நகைச்சுவை மதுமிதா வெளியேற்றப்பட்டார்.அதுகுறித்து பல வீடியோக்களும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. அவரிடம் கேட்டபோது என்னை வீட்டிலுள்ள எட்டு பேரும் குரூப் ராகிங் செய்து என்னை கொடுமைப் படுத்தினார்கள் என்றும், மன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் நான் கையை அறுத்துக் கொண்டேன் என்று கூறினார்.

தற்போது மதுமிதா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் கூறியது, நான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும் போது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். அவசியம் இல்லாமல் நிறைய விஷயங்களை பற்றி பேசி விட்டேன் என்று தெரிவித்தார்.ஆனால் சில தினங்களாகவே என்னுடைய ரசிகர்கள் நேரலையில் பேச வேண்டி கேட்டுக் கொண்டார்கள் அதனால்தான் நான் நேரடியாக லைவ் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதனால் தான் நான் சமூக வலைப்பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளேன். பிக்பாஸ் வீட்டிலும் சரி வெளியிலும் சரி எனக்கு ஆதரவளித்த அனைவருக்குமே இந்த வீடியோ மூலம் நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார். அன்றைக்கு நான் செய்தியாளர்களிடம் சந்திப்பில் பேசிய அனைத்து விஷயங்களும் உண்மைதான். ஆனால் என்ன பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் மன உளைச்சல் தான், ஆனால் எனக்கு வழக்கமாக ஏற்படும் மன உளைச்சலுடன் அதிகமாக ஏற்பட்டது. மேலும், வெளியே வந்து 20 நாட்கள் அந்த மன உளைச்சல் அதிகம் இருந்தது. அதனால்தான் மக்களிடம் பேசப்போகிறேன் என்று சொன்னவுடன் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டுப் பேசினேன்.

- Advertisement -

தற்போது நான் நன்றாக குணமடைந்து விடுகிறேன். மனதளவில் தான் இன்னும் பாதிப்பு குறைய வில்லை என்று கூறினார். அதுவும் கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். நான் இப்போதெல்லாம் படப்பிடிப்புகள் எல்லாம் செல்ல ஆரம்பித்து விட்டேன். எனக்காக வருத்தப்பட்டு கண்ணீர் விட்ட ரசிகர்களுக்கும், எனக்கு ஆதரவளித்த மக்களுக்கும் நன்றி என்று அந்த வீடியோவில் மதுமிதா கூறியுள்ளார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் உடன் ஏற்பட்ட விவகாரங்களில் தன்னுடைய கையை அறுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியே வந்துவிட்டேன். இதனால் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இத்துடன் மட்டும் இந்த நிகழ்வு முடியவில்லை, மதுமிதா சம்பளம் கேட்டு தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என மிரட்டுவதாக விஜய் டிவி மதுமிதா மீது புகார் செய்து உள்ளார்கள். ஆனால் மதுமிதா வெளியே வந்து இதுவரை எந்த ஊடகங்களையும் சந்தித்து தனக்கு நேர்ந்ததை குறித்து எதுவும் பேசவில்லை.நான் இதுவரை எந்த ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்க வில்லை, சமூகவலைத்தள பக்கங்களுக்கு நேரலையில் கூட பேசவில்லை.

முதன்முறையாக விஜய் டிவி அளித்த புகாரின் மூலமாகத்தான் பிக் பாஸ் வீட்டில் நடந்ததை கூறினேன். இதற்காக விஜய் டிவி ஒரு நாள் கூட செய்தியாளர்களை சந்தித்து என்ன நடந்தது என்று ஏற்பாடு செய்யவில்லை. மேலும், ஒருநாள் செய்தியாளர்களை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமையான விஷயங்களை கூறினேன். நான் தண்ணீருக்காக கடவுளிடம் வேண்டுவது வழக்கம். அதை அரசியலாக மாற்றி விட்டார்கள் அந்த எட்டுப்பேர். மேலும், நான் அரசியல் பேசுகிறேன் என்று பிக்பாஸ் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள் அந்த கடிதத்தில் நீங்கள் பேசுவது எதையும் டெலிகாஸ்ட் செய்ய இயலாது என்று கூறியவுடன் அவர்களுக்கு அது அல்வா சாப்பிடுவது போல் ஆனது. அதன் பின்னர் தான் என்னை அந்த எட்டு பேரும் சேர்ந்து ராகிங் செய்ய ஆரம்பித்தார்கள்.அதில் நான் சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் அபிராமி, சாக்ஷி அணியும் ஆடைகளைப் பற்றி பேசியது வைத்து என்னை சராமாரியாக பேசினார்கள். ஆனால் எனக்கு யாரும் ஆதரவாக இல்லை.

என்னை பேச விடாமல் அவர்கள் 8 பேரும் என்னை வைத்து தாறுமாறாக பேசினார்கள். இந்த பிரச்சினையில் சேரன் சாரும் கஸ்தூரி மேடம் தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்கள் பேசின பேச்சு என்னை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. என்னசெய்வதென்று அறியாமல் நான் என் கையை அறுத்துக் கொண்டேன். அப்போது கூட அந்த எட்டுப் பேரில் ஒரு சில பேர் ரத்தம் கொட்டி இருக்கும் நிலையில் கூட அவ இதெல்லாம் டிராமா என்று கூறினார்கள். அந்த எட்டு பேரில் யாரும் ஆறுதலாகவும் பேசவில்லை, முதல் உதவியும் செய்யவில்லை. சேரன் சாரும், கஸ்தூரி மேடம் தான் எனக்கு ஆதரவளித்து எனக்கு முதல் உதவி செய்தார்கள் .அதற்கு பின்னால் நான் விக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தேன். எனக்கு நடந்த இந்த கொடுமையான சம்பவத்தை மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல் சார் எனக்கு நீதி வாங்கி தர வேண்டும் என நான் கேட்டுக் கொண்டேன்.

Advertisement