ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருப்பேன். பிக் பாஸ் நடிகை மதுமிதா போட்ட ட்வீட்.

0
6971
Madhumitha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பெண் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மதுமிதா. இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக ஜாங்கிரி என்று தான் அழைப்பார்கள். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

இவர் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகை மதுமிதா அவர்கள் தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : புடவை கட்டுங்க அக்கா அதான் சூப்பர்.இது நல்லா இல்ல. செம்பருத்தி சீரியல் நடிகைக்கு ரசிகர் அட்வைஸ்.

தனால் நடிகை மதுமிதாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். பின்னர் வெளியே வந்தவுடன் மதுமிதா அவர்கள் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் தன்னை குரூப் ராகிங் செய்து என்னை தற்கொலை முயற்சிக்கு தூண்டி விட்டார்கள் என்று கோபமாக பேசினார். இந்த நிலையில் மதுமிதா மகளீர் தினத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் செய்தி பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள். அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை.

-விளம்பரம்-

சரியோ தவறோ அவளே கடந்து போவாள். உங்கள் சுட்டிக்காட்டல் அறிவுப் பூர்வமாக இருக்கட்டும். விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதித்துக் கடந்து போவேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது மதுமிதா, கவின் நடிப்பில் வெளியான ‘நட்புன்னா என்ன தெரியுமா ‘ படத்தை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்திரன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement