இந்தாண்டு ஒளிபரப்பாகி வரும் பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக சேர்க்கப்ட்டுள்ளது “”பிக் பாஸ் சிறை”. தவறு செய்யும் முற்றிலும் எந்த வசதிகளும் இல்லாத இந்த சிறையில் தவறுகள் செய்யும் போட்டியாளர்களை அடைத்து விடுகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சிறையில் மஹத் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அணைத்து போட்டியாளர்களை பற்றிய குறும்படம் ஒன்று ஒளிபரப்பானது. அதில் அதிக விதி மீறல்களை செய்த போட்டியாளர்களுக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. அதில் மஹத் தானதாக முன்வந்து ‘நான் தான் அதிக விதி மீறல்களை செய்தேன்’ என்று ஒப்புக்கொண்ட சிறை தண்டனையை எற்றுக் கொண்டார்.
சிறைக்கு சென்ற மஹத்திற்கு சில போட்டியாளர்கள் எந்த உணவையும் தரக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அவருக்கு பிக் பாஸே உணவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் நேற்று மஹத்திற்கு களி மற்றும் சாம்பார் உணவாக வழங்கபட்டது.
இதனை யாஷிகா சிறையில் இருந்த மஹத்திடம் கொண்டு சென்று கொடுத்தார். மஹத் களி உண்பதை பார்த்த பாலாஜி மிகவும் கண்கலங்கி” ரொம்ப கஷ்டமா இருக்கு,என் எதிரிக்கு கூட இந்த நெலமை வரக்கூடாது ” என கூறி மஹத்திடம் ஆறுதல் சொன்னார்.