அந்த நடிகரின் பாட்டுக்கு ஆட முடியாது.! சிம்புவுக்காக பிரபல நடிகரை கேவலப்படுத்திய மஹத்.!

0
1257
mahat

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பொஸ் 2 நிகழ்ச்சியில் தினமும் ஒரு சர்ச்சையான விடயம் நடந்து விடுகிறது. தற்போது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்களில் நடிகர் மஹத், இக்கால இளசுகளின் மத்தியில் மிகவும் பரீட்சியமான ஒரு நபர் என்று கூறலாம். இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே இவர் பெரிதாக சர்ச்சையில் ஒன்றும் சிக்க வில்லை.

mahat

ஆனால், சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த செயல் தனுஷ் ரசிகர்களை கொஞ்சம் காண்டில் ஆழ்த்தியுள்ளது என்று கூறலாம். நேற்று (ஜூன் 28) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், பெண்கள் எஜமானர்கள், ஆண்கள் வேலையாட்கள் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்கின் ஒரு அங்கமாக வேலையாட்கள், எஜமானிகளை நடனமாடி மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரு டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. இதில் நடிகர் மஹத்திடம் மற்ற போட்டியாளர்கள் நடிகர் தனுஷ் படத்தில் வரும் ‘ஒத்த சொல்லலா ‘ என்ற பாடலுக்கு நடனமாட சொல்லி கேட்டுள்ளனர்.ஆனால், நடிகர் மஹத் அந்த பாட்டிற்கு நான் ஆடமாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார்.

dhanush actor

பின்னர், அஜித் நடித்த மங்காத்தா படத்தில் இருந்து வரும் ‘மச்சி ஓபன் த பாட்டில்’ என்ற பாடலுக்கு நடனமாடினார் நடிகர் மஹத். நடிகர் மஹத், நடிகர் சிம்புவின் நண்பர் என்று தெரியும்.ஆனால் சிம்பும், நடிகர் தனுஷும் இரண்டு துருவங்கள் என்பதால் தான், மஹத், தனுஷின் பாடலுக்கு ஆடமாட்டேன் என்று அடம்பிடித்தாரோ என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.