தகாத வார்த்தையால் திட்டிய ரசிகன்.! மஹத் காதலி எடுத்த அதிரடி முடிவு..!

0
376
mahat

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் யாஷிகா மீது வைத்திருந்த கண்மூடித்தனமான காதல் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மஹத் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்தும் யாஷிகா, மஹத்தை காதலித்து அனைவர் மத்தியிலும் யாஷிகா மீது ஒரு சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

mahat

யாஷிகா மற்றும் மஹத்திற்கு இடையேயான காதல் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை முன்வைத்து வந்தனர். மஹத்தை பற்றி பலரும் தப்பாக பேசிய போது அவரது காதலி பிராச்சி, மஹத்திற்கு பக்கபலமாக இருந்து வந்தார். ஆனால், யாஷிகாவை, மஹத் காதலிக்கிறார் என்ற விடயத்தை தெரிந்ததும் மஹத்துடனான காதலை தான் முறித்துக்கொண்டு விட்டதாக பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மஹத்தும் பிராச்சிதான் என்னுடைய உலகம், இந்த உலகத்திலேயே அவர் அவரை தான் நான் மிகவும் கத்திலிக்கிறேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால்,அவரது பதிவிற்கு பிராச்சி எந்த ஒரு ரெஸ்பான்ஸும் அளிக்கவில்லை. இதனால் பிராச்சி, மஹத்தை மன்னிக்கவில்லை என்று பலரும் நினைத்து வந்தனர்.

Mahat-Raghavendra

இந்நிலையில் மஹத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய நீண்ட நாட்கள் கழித்து மஹத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அத்தோடு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மஹத், பிராச்சி இடையில் அவரை பிரிந்ததற்கானகாண காரணத்தை தெரிவித்துள்ளார், அதில் பிராச்சி தன்னை இப்போதும் காதலிக்கிறார்,பிக் பாஸ் வீட்டில் நான் யாஷிகா மீது காதல் வயப்பட்டதை அறிந்து அவள் கோவப்பட்டது உண்மை தான்.

ஆனால், நான் யாஷிகாவை காதலிக்கிறேன் என்று கூறியதும் பலரும் பிராச்சியிடம் தவறாக பேசியுள்ளனர். இப்போது தான் உன் காதலர் மஹத் இல்லையே என்னோடு நீ வருகிறாயா என்று பலரும் அவளிடம் கீழ் தரமாக பேசியுள்ளனர். அதன் பின்னர் தான் அவள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனிமேல் மஹத் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். ஆனால், தற்போது நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம் என்று மஹத் கூறியுள்ளார்.