மஹத்தை வற்புறுத்தி பிக்பாஸுக்கு அனுப்பி வைத்த நல்லவர் இவர்தான்.! வெளிவந்த உண்மை

0
278
Big-boss-mahat

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட நபர்களில் இருந்து மஹத் வெளியேற்றப்பட்டார். தன் தலையில் தானே மண்ணை அல்லி வீசிக்கொண்டது போல மஹத் செய்த சில அநாகரீக மற்றும் அத்து மீறிய செயல்களால் அவர் மக்களின் வெறுப்பை சம்பாதித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Mahat-with-silambarasan

மஹத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக தனது காதலி பிராச்சியுடம் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு தான் சென்றார்.அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பல முறை தனது காதலி பிராச்சி குறித்த புராணத்தையே பாடிக்கொண்டிருந்தார். இருப்பினும் யாஷிகாவுடன் ஏற்பட்ட திடீர் காதலால் மஹத்துடனான காதலை முறித்துக் கொண்டார் பிராச்சி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மஹத் கலந்து கொண்டது அவரது காதலி பிரச்சிகாக தான் என்று பலரும் நினைத்து வந்தனர். ஆனால், அவரை இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பியதே நடிகர் சிம்பு தான் என்று மஹத் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத் பேசிய போது ”என்னை இதனை நாட்கள் சப்போர்ட் செய்திருந்த எனது நண்பர்களுக்கு நன்றி, என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி அனுப்பியது சிம்பு தான். அதற்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்.

Mahat

நடிகர் மஹத்தும், சிம்புவும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரியும். மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகாவிடம் அத்து மீறி நடந்து கொண்டதை குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிம்புவிடம் கேட்ட போது “அவனுக்கு காதலி இருக்கிறார். ஒரு வேலை அவர் யாஷிகாவின் அனுமதி இல்லாமல் அப்படி நடந்து கொண்டால் நான் அவரது சட்டையை பிடித்து கேட்பேன். ஆனால், அவர்கள் இருவரும் நண்பர்கள் தான்”என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.