தமிழில் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி . ஆனால் ,2010 ஆம் ஆண்டே தெலுங்கில் வெளியான ‘ஜும்மண்டி நாடம் ‘ என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த நடிகை டாப்ஸி, அதன் பின்னர் பல மொழி படங்களில் நடித்துவிட்டார்.
நடிகை டாப்ஸி சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் மஹத்தை காதலித்து வந்தார் ஆனால், சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமீப காலமாக நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மேதிவ்ஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டன. ஆனால், இது குறித்து மௌனம் சாதித்து வந்தார் நடிகை டாப்ஸி.
இந்நிலையில் சமீபத்தில் கோவாவிற்கு குடும்பத்துடன் சுற்றுல்லா சென்றுள்ளார். அங்கே மேதிவ்ஸ்வின் குடும்பத்தினரும் வந்ததாகவும் இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் வலைத்தளங்களில் சில செய்திகள் தீயாக பரவி வருகிறது.
மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் இரண்டு குடும்ப நபர்கள் முன்னிலையில் நடிகை டாப்ஸியும்-மேதிவ்ஸும் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் சில ஊடங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை டாப்ஸி தற்போது இந்தியில் 4 படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு டாப்ஸியின் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.