யாரும் பார்க்காத நேரத்தில் மஹத் செய்த மோசமான செயல்.! முகம் சுளித்த பார்வையாளர்கள்! புகைப்படம் உள்ளே

0
1511
Mahat-bigg-boss

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மஹத் செய்யும் லீலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.. மஹத் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் அனைவரின் விமர்சனத்திற்கு பலியாகி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று(ஜூலை 5) மஹத் செய்த மற்றுமொரு அநாகரிக செயலை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

Mahat

பிக் பாஸ் வீட்டில் நேற்று டேனி மற்றும் மும்தாஜ் ஆகியோர்க்கு இடையே சூடான விவாதம் போய் கிண்டிருந்தது. குக்கிங் டீமில் இருக்கும் டேனி காபீ காப் சுத்தமாக இல்லை என்று க்லீனிங் டீமில் உள்ளவர்களை தனது மெட்ராஸ் பாஷையில் சாதாரணமாக கேட்க மும்தாஜ் கொஞ்சம் டெம்பர் ஆகிவிட்டார்.

இருவருக்கும் இடையே சூடான விவாதம் போய் கொண்டிருக்க ஒரு புறம் மஹத் மற்றும் யாஷிகா கட்டிப்பிடித்து கொண்டிருப்பதை கண்ட பாலாஜி எச்சிலை கரைத்து ‘து’ என துப்பியது நேற்று வெளியான ப்ரோமோ விடீயோவிலேயே நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் அதன் பின்னர் மஹத் செய்த செயலை நீங்கள் கவனிக்க தவிறி இருக்கலாம்.

yashika

டேனி மற்ற போட்டியாளர்களிடம் காபி கப் பஞ்சாயத்தை பற்றி லிவ்விங் ஏரியாவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சமயல் அறையில் நின்று கொண்டிருந்த யாஷிகா, முதலில் மஹத்தை கன்னத்தில் கிஸ் செய்தார். உடனே அவரும் யாஷிக்காவை கிஸ் செய்ய முயன்ற போது பாலாஜி அவருக்கு முட்டு கட்டையாக இருந்தார். ஆனாலும், பாலாஜி அங்கிருந்து சற்று விலகியதும் சட்டென்று யாஷிகாவின் கன்னத்தில் கிஸ் கொடுத்தார் மஹத்.