நித்யா வெளியேறும் சோகமான நேரத்தில் மஹத், யாஷிகா செய்த லீலை.! புகைப்படம் இதோ.!

0
2086
mahat
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மிகவும் கண்ணியமான முறையில் நடந்து கொண்டனர். ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் சில சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது.குறிப்பாக மஹத் செய்யும் அத்து மீறல்கள் ஏராளம்.

-விளம்பரம்-

mahat

- Advertisement -

ஏற்கனவே கமல், பொன்னம்பலம் ஆகியோர் மஹத் செய்த அநாகரீக செயல்களை மறைமுகமாக கண்டித்து வந்தனர்.இருப்பினும் அவர் மாறியது போல தெரியவில்லை என்பது நேற்றும் தெரிந்தது. நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற போட்டியில் யாஷிகா மற்றும் நித்யா இருந்து வந்தனர்.இறுதியில் நித்யா போட்டியை விட்டு வெளியேறினார். எப்போதும் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக சக போட்டியாளர்களிடம் விடை பெற்று செல்வார்கள். அதே போல நேற்று நித்யா வெளியேறுவதற்கு முன்பாக சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்கள்.

ஆனால், எப்போதும் போல தனது சித்து விளையாட்டை தொடர்ந்த மஹத், நித்யாவிற்கு ஆறுதல் கூறாமல் ஒரு ஓரத்தில் நடிகை யாஷிகாவை கட்டியணைத்து கொண்டிருந்தார். மற்ற அனைவரும் நித்யா வீட்டை விட்டு வெளியேறுவதை எண்ணி கொஞ்சம் உருக்கத்தில் இருக்க, எப்போதும் போல மஹத் , யாஷிகாவுடன் ரொமான்ஸ் செய்வதில் தான் குறியாக இருந்தார்.

-விளம்பரம்-

Yashika

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா, ஷாரிக் போன்றவர்கள் செய்யும் அத்துமீறல்கள் ஏராளம். குறிப்பாக சில வாரங்களாக நடிகர் மஹத், யாஷிகாவிடம் மிகவும் மோசமாக நடந்து வருகிறார் என்று பலரும் குறை கூறி வருகின்றனர்.இருப்பினும் மஹத் இதுபோன்ற அநாகரீக செயல்களை நிறுத்தாமல் இருப்பது ரசிகர்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

Advertisement