பிராச்சி மஹத் காதல் முறிந்ததா.! இன்னும் ஏன் சந்திக்கவில்லை.? இதுதான் காரணமா ..! வெளிவந்த உண்மை.!

0
415
mahat

கடந்த வாரம் நாமினேஷனில் இருந்த போட்டியாளர்களில் இருந்து மஹத் வெளியேற்றபட்டுவிட்டார். இவரது எலிமினேஷன் யாருக்கு பதிப்பாக இருந்ததோ யாஷிகாவிற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தனது காதலர் வெளியேறி விட்டரே என்று யாஷிகா தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மஹத் வெளியேறிய போது ரித்விகா, ஜனனி ஆகியோர் மஹத்திடம், வெளிய சென்றதும் பிராச்சியை போய் பார் என்று அறிவுரை கூறி அனுப்பினார். இதில் ட்விஸ்ட் என்னவெனில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத் அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது யாஷிகா, மஹத்திடம் ””நீ ரொம்ப நல்லவன்.. ஐ மிஸ் யூ.. பிராச்சியையும் மிஸ் பண்ணதா சொல்லு.. ஐ லவ் யு” என்று தெரிவித்திருந்தார்.

mahat

யாஷிகா அப்படி கூறியிருந்ததை பார்க்கும் போது வெளியே சென்றதும் மஹத், பிரச்சியை நேரில் சந்தித்து அவருடன் சேர்ந்து விடுவார் என்று எண்ணியது போல தெரிந்தது. ஆனால், உண்மையில் பிரச்சி, மஹத்துடனான காதலை முறித்துக் கொண்டிருக்கிறார் என்பது யாஷிகா மற்றும் மஹத்திற்கு பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் இருந்த போது மஹத்தின் காதலை மஹத்திற்கு சப்போர்ட் செய்யுமாறு அடிக்கடி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார் பிராச்சி. ஆனால், மஹத், யாஷிகாவை காதலிப்பது உண்மை தான் என்று கூறியபோது, மஹத்துடன் உண்டான காதலை முறித்துக் கொண்டுவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிராச்சி, சில மணி நேரத்தில் அந்த பதிவை நீக்கி இருந்தார்.

yashika 1

மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் இதுவரை அது குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருக்கிறார் பிராச்சி. இதனால் பிராச்சி இன்னமும் மஹத்திடம் கோபமாக உள்ளாரா என்று எண்ணம் தோன்றுகிறது. வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் வெளியே வந்தவுடன் ‘பிக் பாஸ் ஜெர்னி’ விடியோவை வெளியிடுவார்கள் அப்படி எதுவும் மஹத்தின் எந்த விடியோவும் ஹாட் ஸ்டாரின் வெளியாகவில்லை. அதே போல சமூக வலைத்தளத்திலும் மஹத் இன்னும் எந்த பதிவையும் போடவில்லை.

Mahat-Raghavendra

தற்போது மஹ்தின் காதலி பிராச்சி வெளிநாட்டில் இருப்பதால் மஹத் அவரை சந்திக்க முடியவில்லை, இந்த காரணத்தால் தான் 2 நாட்கள் ஆகியும் அவர்களுக்குள் உள்ள பிரச்ச பற்றி எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை, இதுவரை மஹத்தும் தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த ஒரு பதிவினையும் போடாமல் இருக்கிறார். ஒருவேளை பிரச்சியை நேரில் சந்திக்க முடியாமல் இருக்கும் மஹத், அவரை தொலைபேசி வாயிலாக சமாதானம் செய்து வருகிறாரா என்றும் தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் இருவரும் நேரில் சந்தித்தால், பிராச்சியை மஹத் சமாதானம் செய்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.