மஹத்தை அறைந்த சிம்பு..! மஹத் வெளியிட்ட முதல் வீடியோ.! வைரலாகும் வீடியோ.!

0
150
mahat
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறிய மஹத் எங்கு சென்றார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற ஒரு தகவலும் இல்லாமல் இருந்து வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற மஹத் பேட்டிகளில் பங்கேற்காமலும், சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிவிட்டு வெளியே வந்துள்ள மஹத் முதன் முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிய சென்ற மஹத்தை, அவரது சிறு வயது நண்பரும் நடிகருமான சிம்பு சந்தித்து வரவேற்றுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் மஹத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், மஹத்தை கேக் வெட்டி வரவேற்றுள்ள சிம்பு, மஹத்தின் கன்னத்தில் செல்லமாக அடித்து பின்னர் அவரை கட்டிபிடித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement