பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் தன் வெளியேற்றம் குறித்து பேசி மகேஸ்வரி வெளியிட்ட முதல் வீடியோ.

0
256
maheswari
- Advertisement -

பிக் பாஸில் இருந்து வெளியேறிய மகேஸ்வரி தன்னுடைய வெளியேற்றம் குறித்து பேசி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் 5 வாரங்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் ஆளாக தாமாக ஜிபி முத்து வெளியேறிய நிலையில் அவரை தொடர்ந்து மெட்டி ஒலி ஷாந்தி, அசல் கோலார், ஷெரினா ஆகியோர் வெளியேறினர். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அசீம் , விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் ,மகேஸ்வரி ஆகியோர் இடம்பெற்றனர்.

-விளம்பரம்-

அதில் அசீம் அதிகமாக வாக்குகள் பெற்று முதல் ஆளாக காப்பாற்றப்பட்டார். அவரை எடுத்து விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் ஆகியோர் கடந்த வார எவிக்ஷனில் இருந்து காப்ற்றப்பட்டனர். இறுதியில் குறைந்த வாக்குகளை பெற்ற மகேஸ்வரி நேற்று வெளியேற்றப்பட்டார். மகேஸ்வரி வெளியேறுவதற்கு முக்கிய காரணமே அவரது திமிரான பேச்சுக்களும் விக்கிரமனுடான பிரச்சனைகளும் தான்.

- Advertisement -

ஆரம்பம் முதலே தனக்கென்று ஒரு கேங்கை அமைத்துக் கொண்டு குருப்பீசத்தில் ஈடுபட்டார் மகேஸ்வரி. மேலும், அடிக்கடி தன்னுடைய குரூப்புடன் இணைந்து விக்கிரமனை தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டே வந்தார். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஹேட்டர்ஸ்கள் உருவானது. அதிலும் கடந்த வாரம் மைனாவுடன் சேர்ந்து விக்கிரமனை பாடி லாங்குவேஜ் செய்து கேலி செய்து இருந்தார் அதிலிருந்து இவருக்கு ஹேட்டர்ஸ்கள் மேலும் அதிகரித்தது.

சொல்லப்போனால் இந்த வாரம் ராம் அல்லது தனலட்சுமி தான் வெளியேறி இருக்க வேண்டியது. இதற்கு முக்கிய காரணம் ராம் பிக் பாஸ் வீட்டில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அதேபோல தனலட்சுமி அனைவரிடமும் வம்பு இழுத்துக் கொண்டு அடிக்கடி விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார். மேலும், அடிக்கடி நான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து வெளியில் செல்ல வேண்டும என்னை வெளியே அனுப்புங்கள் என்று தொடர்ந்து கூறிக்கொண்டு வந்தார்.

-விளம்பரம்-

ஆனால், ஒவ்வொரு முறையும் அப்படி சொன்ன சிறிது நேரத்தில் நான் பேசியது தவறுதான் என்னை வெளியே அனுப்பி விடாதீர்கள் என்றும் நாடகமாடி வந்தார். ஆனால், கடந்த வாரம் தனலட்சுமி விட மகேஸ்வரி செய்த செயல்பாடுகளால் கடுப்பான ரசிகர்கள் அவரை வெளியேற்றி இருக்கிறார்கள். பிக் பாஸ் பின் வெளியேறிய மகேஸ்வரியை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி வரவேற்று இருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து வெளியேற்றத்திற்கு பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் மகேஸ்வரி ‘அனைவருக்கும் நன்றி, நான் மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். என்னுடைய வெளியேற்றத்தை நினைத்து நான் வருத்தப்படவில்லை. ஏனென்றால் நான் என்னுடைய 100 சதவீதத்தை கொடுத்தேன். எனக்கு நீங்கள் காண்பிக்கும் அனைத்து அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அதனால் நான் என்னுடைய வெளியேற்றத்தை பற்றி கவலைப்படவில்லை என்னுடைய விளையாட்டை ஆதரித்த அனைவருக்கும் மிக்க நன்றி’ என்று கூறியுள்ளார்.

Advertisement