ஆண்களின் underwear..! சென்ராயன் செய்த மோசமான செயல்.! மமதி அதிர்ச்சி தகவல்

0
1507
Mamathi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக மமதி சாரி வெளியேறினார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மமதி பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சங்கடமான நிகழ்வுகள் பற்றி தெரிவித்துள்ளார்.

Mamathi-and-Mumtaj-in-Bigg-Boss-House

கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மும்தாஜ் பொன்னம்பலம், அனந்த் வைத்யநாதன், மமதி ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை(ஜூன் 1) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களை சந்த்தித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேர போவது மமதி என்று அறிவித்ததார். இதனை கேட்டதும் நடிகை மும்தாஜ் கண்ணீர் விட்டு அழுதார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் எஜமான் மற்றும் பணியாட்கள் என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது அதில் சில நாட்கள் ஆண்கள் எஜமானர்களாகவும், சிலநாட்கள் பெண்கள் எஜமானர்களாகவும் இருந்து வந்தனர். இதில் பெண்கள் பணிப்பெண்ணாக இருந்த போது ஆண்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர் என்று சமீபத்தில் மமதி தெரிவித்துளளார்.

Mamathi-Chari-in-Bigg-Boss-House

இதுகுறித்து சமீபத்தில் அவர் தெரிவித்தது என்னவெனில்”பிக் பாஸ் வீட்டில் பெண்கள் பணி பெண்ணாக இருந்த போது எஜமானர்களான இருந்த ஆண்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். அதிலும் சென்றாயனுக்கு பணிப்பெண்ணாக இருந்த மும்தாஜை, சென்ட்ராயன் அவரது உள்லாடையை துவைக்க சொல்லி கொடுத்தார். அதே போல மற்ற ஆண்களும் என்னிடம் வேலை வாங்க வேண்டும் என்ற பெயரில் மோசமாக நடந்து கொண்டனர் ” என்று கூறியுள்ளார்.