கடந்த சில நாட்களாகவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் நடிகர் மணிகண்டன் ராஜேஷ் மற்றும் அவர் மனைவி நடிகை சோபியா விவாகரத்து குறித்த செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி கஷ்டப்பட்டு சினிமா இண்டஸ்ட்ரியல் நுழைந்தாரோ அதேபோல் தான் கடின உழைப்பால் சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பை பெற்றவர் மணிகண்டன் ராஜேஷ்.

முதலில், மணிகண்டன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அவள்' சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். இவர் வெள்ளித் துறையில் சில படங்களில் நடித்திருந்தாலும் இவரால் தனது தங்கை போல் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியிலும் அவரால் டைட்டிலை கைப்பற்ற முடியவில்லை.
மணிகண்டன் மற்றும் சோபியா விவாகரத்து :
இதற்கிடையே, மணிகண்டன் தன்னுடன் நடித்த நடிகை சோபியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்கிற மகனும் இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்த சோபியா தற்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மணிகண்டன் மற்றும் சோபியா விவாகரத்து பெற்று பிரிந்ததாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வருகிறது.

கிளப் நடத்தி வரும் மணிகண்டன் :
தற்போது மணிகண்டன் நிஜமாகவே தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டாரா என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சில நண்பர்கள் மூலமாக மணிகண்டன் சென்னை நந்தனத்தில் கிளப் ஒன்றை எடுத்து நடத்தத் தொடங்கி இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் பிஸியானதால் , அவரது நட்பு வட்டமே மாறிவிட்டது என்றும், அவரது நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரிய தொடங்கச்சினும் கூறப்படுகிறது. எப்போதும் நண்பர்களுடன் கிளப்பிலேயே இருப்பதால் ஒரு கட்டத்தில் அவர் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் இது குறித்து கேள்வி கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கோபமடைந்த மணிகண்டன் :
அதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த மணிகண்டன் வீட்டிற்கே வராமல் தனியாக ரூம் எடுத்து அதில் தங்கத் தொடங்கி இருக்கிறார். மணிகண்டனின் இந்த நடவடிக்கையால் அவரது மனைவிக்கு என்ன செய்வதென்றே புரியாமல், 'மணிகண்டன் இல்லாமல் நான் எதுக்கு இந்த வீட்டில் இருக்க வேண்டும்' என்று தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். அதற்குப் பிறகுதான் சீரியல்களில் கமிட் ஆகியிருக்கிறார். ஆனால், இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கும் சோபியாவிற்கும் எந்த கருத்து வேறுபாடும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

பிரச்சனையை தீர்க்கப் போராடும் ஐஸ்வர்யா ராஜேஷ்:
அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் சோபியாவை அவங்க வீட்டிலேயே இருக்கவும் கூறி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இந்நிலையில், மணிகண்டன் வீட்டில் கோபித்துக் கொண்டு மனைவி குழந்தையை பிரிந்து இருப்பதால்தான் அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறதாம். இப்போதைக்கு அவர்கள் இரண்டு பேரும் தனித்தனியே தான் இருக்கிறார்களாம், அதனால் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரச்சனை தீர்க்கத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என செய்திகள் வெளியாகி உள்ளன.






