சுச்சி மீது வழக்கு போடப்பட இருக்கிறது. மாயாவிற்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி – பாடகி போட்ட பதிவு.

0
358
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு நபராக இருந்து வருபவர் மாயா தான் தமிழில் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவரை மிகவும் பிரபலமாகியது விக்ரம் திரைப்படம் தான் அதே போல சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம் படத்தின் மூலம் தனக்கான ஒரு பெயரை எடுத்த மாயா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பெயரை எடுத்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக தனக்கென்று ஒரு குழுவை அமைத்துக் கொண்டு மற்றவர்களை கேவலமாக பேசுவது 18 ப்ளஸ் ஜோக் அடிப்பது என்று இவரது செயல் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது.இந்த நிலையில் மாயா குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, பாடகியும், முன்னாள் பிக் பாஸ் பிரபலமான சுஜித்ரா கூறியிருப்பது, மாயா ஒரு லெஸ்பியன். இந்த விஷயம் பிரதீப்பிற்கும் தெரியும்.

- Advertisement -

மாயா இயக்குனர் கௌதம் மேனனின் உதவி இயக்குனருடன் தான் உறவில் இருந்தார். என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கி இருக்கிறார். அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுவாங்க. மாயா, பூர்ணிமாவை கவர் பண்ண பார்க்கிறார். மாயா குடிக்கிற தண்ணீரில் பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படிப்பட்ட ரொம்ப மோசமான பொண்ணு தான் அவள் என்று பேசியிருக்கிறார்.

ஆனால், பூர்ணிமாவுக்கு தெரியாது. பிரதிப்பினால் யாருக்கும் ஆபத்து இல்லை. மாயாவினால் தான் எல்லோருக்கும் பிரச்சினை என்றும் கூறி இருந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து மாயா, சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சுசித்ராவின் இந்த விமர்சனம் குறித்து பாடகியும் மாயாவின் நெருங்கிய தோழியுமான ஸ்வாகதா கிருஷ்ணன் இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது ‘சுசித்ராவின் சமீபத்திய நேர்காணலில் அவர் மாயா பற்றிய மோசமான அவதூறுகளை முன் வைத்தது கண்டிக்கத்தக்கது. மாயாவின் செயல்களை தவறாக சித்தரிக்கும் மற்றும் Lgbtq+ வாழ்க்கை சட்டத்திற்கு எதிராக Homophobic ஆக பரப்புரைக்கும் சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.பதில் சொல்லும் நிலையில் இல்லாத ஒரு நபர் மீது மக்கள் இல்லாத அவதூறு கருத்துக்களை வீசுவதை பார்ப்பது பரிதாபமாக உள்ளது.

தனக்கு வெளியுலகில் நிகழும் அவமானங்களையும் அநீதிகளையும் பற்றிய எந்த அறிதலும் இல்லாத சூழலிலும் மாயாவுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். மாயா மீது இது போல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது முதன்முறை அல்ல. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆடை பட நடிகை அனன்யா, மாயா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement