மாயா பண்றத பாத்து உங்க அம்மா இன்னும் சகலயா ? கமண்டுகளால் கொந்தளித்த மாயாவின் தங்கை.

0
327
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10  வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும், இந்த வாரம் 2 அல்லது மூன்று பேர் எலிமினேட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்க இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு நடந்துகொள்வதாக பிக் பாஸ் கடிந்துள்ளார். அதோடு வாரம் வாரம் மாயா குறித்து எதாவது ஒரு சர்ச்சை எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

- Advertisement -

விமர்சகர் ஜோ மைக்கேல் பேட்டி:

இந்த நிலையில் youtube சேனல் ஒன்றுக்கு விமர்சகர் ஜோ மைக்கேல் என்பவர் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் மாயா குறித்து பேசி இருந்தது, விஷ்ணு பேசுவதே ஆட்களை கவுக்கத்தான். அவர் எத்தனை முறை பூர்ணிமாவிடம் சாரி கேட்டிருப்பார். பூர்ணிமா கேமிற்காக விஷ்ணுவிற்கு எத்தனை முறை உதவி இருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், நம்மைப் பொறுத்தவரை விஷ்ணுவிடை பூர்ணிமா தான் தவறாக தெரிகிறார்.

நிகழ்ச்சியில் மாயா:

அதற்கு காரணம் விஷ்ணு ஆண், பூர்ணிமா பெண். இவ்வளவு ஏன் கமல் சார் மாயாவிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டும் போது சாதுவாக பேசுகிறார். அதே பூர்ணிமாவிடம் பேசும்போது இல்லை. மாயாவை பொறுத்தவரை அவருடைய வாழ்க்கையில் அவர் செய்வது சரியாக இருக்கலாம். ஆனால், வெளியில் உள்ளவர்களுக்கு அது சரியாக இருக்காது. மாயாவின் மீது நமக்கு ஒரு விதமான வெறுப்பு இருக்கிறது.

-விளம்பரம்-

மாயாவின் சகோதரி பதிவு:

காரணம், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்த சில வேலைகள் தான். மேலும், மாயாவின் சகோதரி பதிவிட்ட ஒரு பதிவுக்கு கீழே ஒரு ரசிகர், அம்மா எப்படி இருக்கிறார்? என்று நலம் விசாரித்தார். அதற்கு மாயாவின் சகோதரி, நன்றாக இருக்கிறார். விரைவில் டிவியில் உங்களை சந்திக்கிறோம் என்று பதிலளித்திருக்கிறார். அதற்கு கீழ் இன்னொரு பதிவில், இன்னுமா அந்த அம்மா சாகாமல் இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். இந்த வன்மம் பிக் பாஸ் வீட்டிற்கு தேவையா? இதைப் பார்த்த மற்றொருவர், தாயைப் பற்றி நீ பேசும் பொழுது உன்னுடைய தாயைப் பற்றி நினைத்துப் பார்த்தாயா.

நெட்டிசன் பதிவு:

உள்ளே இருக்கக்கூடிய போட்டியாளர்கள் வீட்டினுள் நல்லவர்களாக காண்பிக்கப்படலாம். ஆனால், அவர்கள் வெளியே கேடு கெட்டவர்களாக கூட இருக்கலாம். அதேபோல உள்ளே கெட்டவர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் வெளியே நல்லவர்களாக இருக்கலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே போட்டியாளர்களின் போலி தன்மையை காண்பிப்பது தான். மேலும், பிக் பாஸ் வீட்டினில் இருக்கும் ஆறுவது கேமராக்களில் பதிவாகி வரும் காட்சிகள் 20% மட்டுமே உண்மை. இதனால் நீங்கள் உங்களுடைய வன்மத்தை போட்டியாளர்களுக்கு போடும் ஓட்டுகளில் காண்பியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement