தர்ஷனை தலை குனிய வைத்த மீரா.! உண்மையில் ஆசை காண்பித்தாரா தர்ஷன்.!

0
3176
Tharshan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மீரா மிதுன், தர்ஷன் தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாக புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டார். நேற்றய நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் மீரா மிதுன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சாக்க்ஷி மீரா மிதுனிடம் நீதானே இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னிடம் சொன்னாய் ‘தர்ஷன் என்னை பிடித்திருக்கிறது என்று கூறினார் என்றும், எனது வீட்டில் பெண் கேட்க வரலாமா என்று கேட்பதாகவும் சொன்னாயே’ என்று மீரா மிதுனிடம் கேட்டார்.

-விளம்பரம்-

அதற்கு தர்ஷன் மீரா மிதுனிடம், எனக்கு உன்னை பிடிக்கும் என்று மட்டுமே தானே சொன்னேன். அதே போல எனக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார் என்றும் நான் சொன்னேனே என்றார். அதற்கு மீரா மிதுனோ, நான் தான் கொஞ்சம் குழம்பிபோய் சாக்க்ஷியிடம் நீ என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறிவிட்டேன் என்றார்.

- Advertisement -

பின்னர் சாக்க்ஷியோ, தர்ஷனிடம் உனக்கு காதலி இருப்பதை தெளிவாக சொல்லிவிடு என்றார். பின்னர் தர்ஷனும், எனக்கு காதலி இருக்கும் போது நான் ஏன் மீராவிடம் அப்படி சொல்லப்போகிறேன் என்றார். பின்னர் மீரா மிதுன், எனக்கு அவனுக்கு காதலி இருப்பது தெரிந்ததும் நான் விட்டுவிட்டேன் என்றார்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தர்ஷன் மற்றும் மீராவின் பஞ்சாயத்தை தொடங்கினர் கமல். அப்போது பேசிய மீரா, இந்த வீட்டில் நான் முதலில் நுழைந்ததும் எனக்கு தர்ஷனின் நட்பு தான் கிடைத்தது. ஆனால், தர்ஷனுக்கு காதலி இருப்பது எனக்கு தெரியாது அவனும் சொல்லவிலை.

-விளம்பரம்-

ஆனால், தர்சனை எனக்கு பிடிக்கும் என்று அவனிடம் நேரிடையாக சொன்னேன். மேலும், என் அம்மாவிடமும் பேச சொன்னேன். நேற்று நாங்கள் பேசும் போது, எனக்கு உன்னை பற்றி எதுவும் தெரியாது நான் எப்படி உன் அம்மாவிடம் வந்து பேசுவது என்று தர்ஷன் சொன்னார் என்று மீரா கூறியதும் மிகவும் ஷாக்காக மீராவை பார்த்தார் தர்ஷன்.

அதன் பின்னர் பேசிய தர்ஷன், நான் மீராவிடம் உன் அம்மா கிட்ட வந்து பேசுகிறேன் என்று ஒரு வார்த்தை கூட நான் சொல்லவில்லை. வேண்டும் என்றால் நீங்கள் விடியோவை திரும்ப பாருங்கள் என்று அணித்தனமாக சொன்னார். ,மேலும், மீரா தான் என் காதலியை மறந்து விடு என்று என்னிடம் சொன்னார்.

அப்போது குறுக்கே பேசிய மீரா, நீ என்னிடம் காதலி இருப்பதாக சொல்லவே இல்லையே. உனக்கு ஒரு பெண் மீது ஈர்ப்பு இருப்பதாக மட்டும் தானே சொன்னாய் என்று தர்ஷனை பேச விடாமல் பேசிகொண்டே இருந்தார். இதனால் கடுப்பான தர்ஷன் நான் சாருடன் பேசிட்டு இருக்கேன் இரு என்று கூறிவிட்டு பேச தொடங்கினார்.

நான் காதலிப்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால், உனக்கு மாட்டும் தெரியாதா. ஆனால், இவங்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது என்று தான் தெரியவில்லை என்றார். இன்றைய ஏபிசிடில் இவர்கள் இருவர் பேசியதை பார்க்கும் போது யார் பேசியது உண்மை என்றே புலப்படவில்லை. ஆனால், இதுநாள் வரை நல்லப் பெயரை எடுத்து வந்த தர்ஷனின் பெயரை மீரா கொஞ்சம் டேமேஜ் செய்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement