சுஜித்திற்காக வீடியோ வெளியிட்ட மீரா மிதுன். கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

0
59562
meera-mithun Sujith

ஆழ்துளை குழியில் சிக்கி மீட்ப்பட்டுவிட்டுவிட மாட்டோமாஎன்று ஏங்கி வரும் சுஜித்திற்காக தான் தற்போது தமிழகமே பிரார்த்தனை செய்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த 45 மணி நேரத்திற்கு மேலாக சிக்கி தவித்து வருகிறான். சுஜித்தை மீட்கும் மீட்கும் பணி கடந்த பல மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் கைவிட்டுவிட தற்போது 82 அடியில் சிக்கி இருக்கும் சுஜித்தை, 110 அடியில் குழி தோண்டி, சுரங்கம் அமைத்து மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

Image

மேலும், சிறுவன் சுஜித் விழுந்த இடத்துற்கு அருகே தோண்டப்படும் பகுதியில் 98 அடி வரை குழி தோண்டி பின்பு அதை சுஜித் விழுந்த பள்ளத்தோடு இணைக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சுஜித் மீண்டு வர வேண்டும் என உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இத்தனை நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்? நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு? என்பது தான் மக்களின் கேள்வியாக இருந்து வருகிறது.

- Advertisement -

சுஜித் விரைவில் காப்பற்றப்பட வேண்டும் என்று பல்வேறு மக்களும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் உள்ள ரஜினி, கமல் என்று பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மீரா மிதுன், சுஜித் விஷயத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியை குறை சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய மீரா, சுஜித்தை காப்பற்ற பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர். இதே ஜெயலலிதா இருந்திருந்தால் துரிதமாக வேலையை செய்திருப்பார். ஆனால், தற்போதுள்ள முதலமைச்சர் எந்த விஷயமாக இருந்தாலும் இறங்கி செய்ய வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள் என்று கூறியுள்ளார். மீரா மிதுன் இதுநாள் வரை ஒன்றிற்கும் உதவாத பதிவுகளை தான் பகிர்ந்து வந்தார். இதனால் இவர் என்ன பதிவிட்டாலும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வந்தனர்.

-விளம்பரம்-

Image
Image

ஆனால், மீராவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் தற்போது தான் உருப்படியான பதிவை செய்துள்ளீர்கள் என்று கமன்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அதே போல மீரா மிதுன், விளம்பரத்திற்காக தான் இதையும் செய்கிறார் என்று கழுவி ஊற்றி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே மீரா மிதுன், சுஜித் விஷயத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் அறிக்கை, குறிக்கோள் என்று உளறியுள்ளார். அதே போல சஜித் விஷயம் தீயாக பேசப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில் தற்போது தான் மீரா மிதுன் இப்படி ஒரு விடீயோவை வெளியிட்டுள்ளார். ஆனால், சில மணி நேரத்திற்கு முன்னதாக தான் ஒரு அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை மீரா மிதுன் பதிவிட்டிருந்தார். ஆனால், தற்போது என்னவோ சுஜித் விஷயத்தில் மிகுந்த அக்கரை காட்டுவது போல் நடித்து விளம்பரத்தை தேடிக்கொள்கிறார் மீரா மிதுன்.

Advertisement