அவங்க அம்மாவா இப்படி தொடுவாரா ? புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் சேரன் பஞ்சாயத்தை ஆரம்பித்த மீரா மிதுன்.

0
5030
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்தவர் மீரா மிதுன். மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பே இவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்ததாக ஒரு சிலர் இவர் மீது குற்றம் சாட்டி இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த மீராமிதுன் ஒரு டாஸ்கின் போது சேரன் தன்னை தவறான இடத்தில் தொட்டு தள்ளியதாக கூறியிருந்தார். ஆனால் அதற்குஒரு குறும் படம் போட்டு மீராமிதுன் நாடகத்தை அம்பலப்படுத்தி இருந்தார் கமல்.

-விளம்பரம்-

இருப்பினும் சேரன் தன் மீது தவறான இடத்தில் தான் கை வைத்தார் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி இருந்தார் மீராமிதுன். ஆனால் இவருடைய பொய்யான குற்றச்சாட்டை யாரும் ஏற்க தயாராக இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் தொடர்ந்து சேரன் குறித்து அவதூறாக பேசி வந்தார் மீராமிதுன் .ஆனால். அப்போதும் இவரை கண்டு கொள்வதாக இல்லை. இருப்பினும் சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயங்கள் குறித்து ட்வீட் செய்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக் கொண்டு வருகிறார் மீரா மிதுன்.

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸில் சேரன் தனது இடுப்பை பிடித்தது உண்மை தான் என்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள மீரா மிதுன், இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? அவருடைய கை எங்கே இருக்கிறது பாருங்கள்? அவருடைய அம்மாவை இதுபோல தொடுவாரா? சாண்டி இதனை பார்த்தார். அவர் தான் இதற்கு சாட்சி. ஆனால், அவர் ஏன் இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவாக பேசவில்லை என்பது தெரியவில்லை. என்னுடைய பெண் தன்மையை கொச்சைப்படுத்திய கேவலமான நிகழ்ச்சி இந்த பிக் பாஸ் ஷோ. இதற்கு அனைத்திற்கும் மாஸ்டர் மூளையாக இருப்பது கமலஹாசன் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்

மேலும், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மீரா மிதுன் , சேரன் விவாகரத்தில் நடிகர் கமல் ஹாசன் தவறான முடிவை அறிவித்து தனது பிரபலத்திற்க்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும். தனக்கு சேரன் தன்னிடம் தவறாக நடந்த அந்த குறிப்பிட்ட வீடியோ பதிவு தனக்கு வேண்டும் என்றும் அது கிடைக்காமல் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடக்க விடாமல் ஸ்டே வாங்குவேன் என்றும் சவால்விட்டுள்ளார் மீரா மிதுன்.மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க தகுதியே இல்லை என்று கூறியுள்ளார் மீரா மிதுன்.

-விளம்பரம்-
Advertisement