எவ்வளவு திட்டினாலும் சூடு சொரணை இல்லையா. ஏன் இப்படி என்னை காப்பி அடிக்கிறீங்க – மீரா மிதுன் ட்வீட்.

0
78493
meera-nayan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர்தான் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் என்ற அழகி பட்டத்தையும் பெற்றிருந்தார். ஆனால், இவர் மீது தொடரப்பட்ட பல்வேறு மோசடி வழக்கு காரணமாக அந்த பட்டம் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு பின்னர் அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி இடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் நான் தான் இன்னமும் 2016ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா அழகி என்றும், அந்தப் படம் இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது என்றும் கூறிவருகிறார்.

-விளம்பரம்-

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மீரா மிதுன், கண்ணாடி செல்ஃபீ புகைப்படம் ஒன்றை பதிவிட்டி இருந்தார். அதில் அவருடைய செல் போனின் சிகப்பு நிற கவர் தெரியும்படி போஸ் கொடுத்து இருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில், என்னுடைய செல் போன் கவரை கூடவா காப்பி அடிப்பார்கள். படிக்காத நடிகை மட்டுமே இந்த வகையான அனைத்தையும் செய்கிறார். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை பெறுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : எனது உதவி இயக்குநராக ஒரு கிறிஸ்தவரை நான் எப்போதாவது நியமித்திருக்கிறேனா? எஸ் ஏ சி அதிரடி.

மேலும், அதே பதிவில் அடுத்த முறை காப்பி செய்தால் அதில் இதற்கு முன்னோடியாக இருந்தது மீராமிதுன் தான் என்று குறிப்பிட வேண்டும் இல்லையென்றால் இந்த காப்பி கேட் யார் என்பதை நான் தெளிவான விவரத்தை கொடுத்துவிடுவேன் எவ்வளவு திட்டினாலும் சூடு சொரணை இல்லையா பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை வெட்கமே இல்லாம காப்பி என்று குறிப்பிட்டுள்ளார் மீரா மிதுன்.

-விளம்பரம்-

மீரா மிதுனின் இந்த பதிவிற்கு ஏற்றார்போல நடிகை நயன்தாராவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது அதில் மீராமிதுன் குறிப்பிட்டது போலவே சிகப்பு நிற செல்போன் கவரை பயன்படுத்தி நயன்தாரா புகைப்படத்தை எடுத்து இருக்கிறார் நயன்தாரா எனவே மீராமிதுன் நயன்தாராவை தான் இப்படி குறிப்பிட்டு இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது

அதே போல கடந்த சில நாட்களாக இவர் தினமும் ஏதாவது புகைப்படங்களையும் வீடியோக்களையும்பதிவிட்டு வந்தாலும் கவுல் பிராமின் என்பவர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். கவுல் பிராமின் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து மீராவின் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானி கொடுத்த போஸ் கூட மீரா மிதுனிடம் இருந்து காபி அடிக்கப்பட்டது தான் என்று அவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மீரா மிதுன், நான் ஒரு முன்னோடியா இருக்கிறேன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement