எனது உதவி இயக்குநராக ஒரு கிறிஸ்தவரை நான் எப்போதாவது நியமித்திருக்கிறேனா? எஸ் ஏ சி அதிரடி.

0
5910
vijay-father
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார். தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான்.

-விளம்பரம்-

சிறப்பு நேர்காணல்: நடிகர் விஜய் மதமாற்ற ஏஜெண்டாக இருக்கிறாரா? – பதிலளிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன்முழு வீடியோவைக் காண:…

புதிய தலைமுறை ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಫೆಬ್ರವರಿ 20, 2020

சமீப காலமாக விஜய் அவர்கள் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர், நடிகர் விஜய்யை கடுமையாக நிறைய பேர் விமர்சித்துள்ளார்கள். நடிகர் விஜய் மத மாற்ற ஏஜெண்டாக இருக்கிறார் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் எல்லாம் வந்தது. இது குறித்து நீங்கள் கூற விரும்புவது என்று கேட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : புகைபிடிப்பிங்களா? குழந்தை எப்போது? ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த டிடி. வீடியோ இதோ

அதற்கு இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் கூறியது, நான் ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா பெயர் சேனாதிபதி பிள்ளை எஸ் என்றால் சேனாதிபதி பிள்ளை ஏ ‘ என்றால் அலெக்ஸ் . நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். கிறிஸ்துவ முறைப்படி பைபிளில் பல விஷயங்கள் உள்ளது. அதில் நீ உன்னை நேசித்த அளவுக்கு பிறரையும் நேசி. உன் மதத்தை நேசிப்பதை போல எல்லா மதத்தையும் நேசி. அது தான் உண்மையான கிறிஸ்தவன் என்று சொல்லி இருப்பார்கள். என் மதம் தான் என்று உயர்ந்தது என்று மதம் பிடித்து அலைபவர்கள் எல்லாம் மனிதர்கள் கிடையாது. அதனால் தான் நான் சோபாவை ஐந்து வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் நினைத்திருந்தால் அப்போதே எங்கள் கல்யாணத்தை சர்ச்சியில் பண்ணி இருக்கலாம். ஆனால், எனக்கு அதில் உடன்பாடில்லை.

-விளம்பரம்-

மேலும் பேசிய அவர், “எனக்காக பணியாற்றிய உதவி இயக்குநர்கள் இன்று சிறந்த நிலையில் உள்ளனர், நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனது உதவி இயக்குநராக ஒரு கிறிஸ்தவரை நான் எப்போதாவது நியமித்திருக்கிறேனா?. இயக்குநர்கள் தங்கள் மதத்தை அறிய முதுகில் தடவி உதவி இயக்குநர்களை பணியமர்த்தும் ஒரு காலம் இருந்தது, ஆனால் நான் அவர்களின் திறமையை மட்டுமே கருதினேன் என்று கூறியுள்ளார்.

Advertisement