தற்கொலை செய்துகொண்ட விஜய் ரசிகர். அதையும் விமர்சித்த மீரா மிதுன். கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
8875
meera

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விருதை இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மேலும் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ரசிகர் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த பாலா. இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இறப்பதற்கு முன்னால் பாலா தலைவன் படம் பார்க்காமலே போறேன் என்று விஜய்யை டேக் செய்து ட்வீட் செய்திருக்கிறார். பாலாவின் இழப்பிற்கு ட்விட்டரில் வருத்தங்களை தெரிவித்து வரும் விஜய் ரசிகர்கள் #RIPBala என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக விஜயை பற்றி அவதூறாக பேசுவது மீராமிதுன் பாலாவின் இந்த இழப்பையும் கூட விஜயுடன் ஒப்பிட்டுட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

- Advertisement -

அதில், நடிகர்களை திரையில் மட்டும் கொண்டாடுங்கள். அதை விட்டுவிட்டு 24 மணி நேரமும் நடிகர்களை பற்றி கோஷமிட்டு கொண்டிருந்தால் உங்களின் குடும்பமே உங்களை வெறுக்கும். இப்போது நடிகர் விஜயா வந்து உங்கள் குடும்பத்திற்கு சாப்பாடு போகப் போகிறார் என்று கூறியுள்ளார்.

மீரா மிதுனின் இந்த டீவீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள், ஒருவரின் இறப்பில் கூடவா விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், ரசிகர் ஒருவர், ஒருவரின் இறப்பில் கூட பிரபலத்தை தேட வேண்டுமா? கீழ்த்தரமான தரம் தாழ்ந்த செயல். மீரா மிதுனை பின் தொடர்வோர்கள் என்னை பிளாக் செய்து விடுங்கள். இது மனிதாபிமானமற்ற செயல். இதுக்குமேல பொறுக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement