கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது மீராமிதுன் விஷயம்தான். மீராமிதுன் குறித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் பிக் பாஸ் வீட்டில் கூட இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். குறிப்பாக சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வந்த இவர், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான விஷயங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். அதிலும் சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் இதனால் பல்வேறு பிரபலங்களும் இவருக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இருப்பினும் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வைரமுத்து, விக்னேஷ் சிவனை பேட்டி எடுக்க தமிழ்நாடு மீடியாக்களுக்கு தைரியம் இருக்கிறதா? பாதிக்கப்பட்டவர்களை கேள்வி கேட்பதை நிறுத்துங்கள் என்று பதிவிட்டிருந்தார். வைரமுத்து மீது சின்மை மீது புகார் விவகாரம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இப்படி ஒரு நிலையில் வைரமுத்து குறித்து மீராமிதுன் பதிவிட்ட இந்த பதிவுக்கு கீழே ட்விட்டர் வாசி ஒருவர், அவள் ஒரு கேடு கெட்டவன் இவர் ஒரு கேடு கெட்டவள்பிரபலத்திற்காக செய்கிறார்கள். 14 வருடங்கள் கழித்து வைரமுத்து மீது பழி போடுகிறாள் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்து இருந்த சின்மை, ஒரு சரியான அரசியல் கட்சி பெரிய ஆள் கிட்ட மாட்டினால் அந்த பயம் என்னன்னு தெரியுமா. நாக்கு துடிப்பது போல, காய்ச்சலும் நோயும் தனக்கு வந்தால் தெரியும் வரும்போது பார்க்கலாம் என்று பதிவிட்டு இருக்கிறார்.