மீரா மிதுன் சர்ச்சை குறித்து உங்கள் கருத்து என்ன ? ரசிகரின் கேள்விக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்த பதிலை பாருங்க.

0
1215
meera

இயக்குனர் நடிகை தயாரிப்பாளர் என்று பன்முகங்கள் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த போதே இவரை பலர் விமர்சித்தனர். அதே போல சமீபத்தில் வனிதாவின் மூன்றாவது விஷயத்தில் தலையிட்டு வாங்கி கட்டிக்கொண்டார் என்பதும் பலரும் அறிந்த ஒன்று.

மேலும், இவர் பல்வேறு பொது பிரச்சனைகளுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் குரல் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடன் ட்விட்டர் வாசி ஒருவர், தமிழ் சினிமாவில் நெபோடிசம் குறித்து மீரா மிதுன் கூறியுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.

- Advertisement -

எதற்கு என்னை தாக்கவா ? Metoo க்காக எனது குரலை எழுப்பினேன். கோவில்களை பற்றி பேசியபோதும், கந்த சஷ்டி கவசம் கேலி செய்யப்பட்டபோதும், சமீபத்தில் ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனை பொது பிரச்சனையாக மாறிய போதும் பிரபலங்கள் கருத்து தெரிவித்த போது தாக்கப்பட்டனர். இப்போது மற்றவர்கள் குரல் கொடுங்கள். நான் ஆனந்த கண்ணீருடன் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்கிறேன்

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த டீவீட்டை பார்க்கும் போது ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதா விஷயத்தில் படாதபாடு பட்டதோடு கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். மேலும், லட்சுமி ராமன் குறிப்பிட்டது போல மீராமிதுன் தனது விவகாரத்தில் தலையிடும் அனைத்து பிரபலங்களையும் வறுத்தெடுத்து வருகிறார. அந்த வகையில் நடிகர் சாந்தனு, நடிகர் சஞ்சீவ், மனோபாலா என்று பல பிரபலங்களையும் விமர்சித்து இருந்தார் மீரா மிதுன்.

-விளம்பரம்-

இயக்குனர் நடிகை தயாரிப்பாளர் என்று பன்முகங்கள் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த போது

Advertisement