கடந்த சில தினங்களாக மீரா மிதுன் தான் சமூகவலைதளத்தில் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் ஒரு நபராக இருந்து வருகிறார் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசியதை பலரும் கண்டித்து வருகின்றனர்.மேலும், பல்வேறு பிரபலங்களும் மீரா மிதுனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இயக்குனர் பாரதி ராஜா இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
https://twitter.com/Suriya_offl/status/1293082180936069122
இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா, மீரா மிதுனின் சர்ச்சைக்கு முதன் முறையாக பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா,எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்
அதுவும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பத்தை குறிப்பிட்டு இந்த டீவீட்டை பதிவிட்டுள்ளார். அதாவது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் கந்த 2018 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் இரண்டு தொகுப்பாளிகள் சூர்யா உயரத்தை கிண்டல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது சூர்யாவின் ரசிகர்கள் சன் டிவி அலுவலகத்திற்கு முன்னாள் போராட்டங்களை கூட நடத்தினர்.
https://twitter.com/Nirmal_twetz/status/954603726966161408
பின்னர் அந்த இரண்டு தொகுப்பாளினிகளும் மன்னிப்பு கேட்டனர். அப்போது இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்திருந்த சூர்யா, தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற என்று பதிவிட்டிருந்தார். அதனை தற்போது குறிப்பிட்டுள்ளார் சூர்யா.




