இவன் சாவுக்கு காரணம் சனம் ஷெட்டி தான். அவளை கைது செய்யுங்க – மீரா மிதுன் வெளியிட்ட ஷாக்கிங் ஆதாரம்.

0
4402
sanam
- Advertisement -

நடிகையும் மாடல் அழகியுமான மீராமிதுன் பற்றி அனைவருமே அறிவார்கள். மாடல் அழகியான மீராமிதுன் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல இவர் மிகவும் பிரபலமானது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் மோசடிகளில் ஈடுபட்டதாக இவர் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் இவருக்கும் ஜோ மைக்கல் என்பவருக்கும் பிரச்சனை வெடித்தது. இதன் மூலம் தான் இவர் திடீரென்று சமூகவலைதளத்தில் பிரபலமானார்.

-விளம்பரம்-

அதன் மூலம்தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு எக்கச்சக்க கெட்டப் பெயர்தான் கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவர் செய்த பல்வேறு விதமான செயல்களால் ரசிகர்கள் இவரை பெரிதும் வெறுத்தனர். அதுவும் சேரன் விஷயத்தில் இவருடைய நாடகங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது.கடந்த சீஸனின் மிகவும் வெறுக்கப்ட்ட போட்டியாளர் என்றால் அது இவர் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் பிக்பாஸ் பற்றியும் போட்டியாளர்கள் பற்றியும் தொடர்ந்து சரியான விஷயங்களை பேசி வந்தார்.ஆனால் அப்போதும் இவரது பேச்சை யாரும் கண்டுகொள்ளவில்லை.

- Advertisement -

அதன் பின்னர்தான் தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்கள் டார்கெட் செய்து தொடர்ந்து அவதூறாக பேசி அதன் மூலம் நெகட்டிவ் பப்ளிசிட்டியை பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது சனம் ஷெட்டி குறித்து ஒருசர்ச்சையான பதிவை போட்டு இருக்கிறார் மீரா மிதுன். தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் சனம் செட்டி நடிகை என்பதை விட கடந்த சீசன் போட்டியாளரான தர்ஷன் விஷயத்தில்தான் இவரை பற்றி பலரும் அறிந்தார்கள். மாடல் அழகியான இவர் மீராமிதுன் பங்குபெற்ற 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்தான்.அப்போது இவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

அம்புலி பட நடிகர் அஜய்யுடன் சனம்

மீரா மிதுனுக்கு முதல் இடம் கிடைத்தது. ஆனால் சமீபத்தில் தான் மீராமிதுன் இடமிருந்து பறிக்கப்பட்டு அந்த அழகி பட்டம் இவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை சனம் ஷெட்டி ஒரு கொலைகாரி என்றும் அவரை ஏன் கைது செய்யவில்லை என்றும் மீராமிதுன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதாவது நடிகை சனம் ஷெட்டி நடித்த அம்புலி படத்தில் நாயகன் அஜய் என்பவரை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தற்கொலைக்கு செட்டி தான் காரணம் என்றும் ஒரு சில ஸ்க்ரீன் ஷாட்டை மீரா மிதனுக்கு யாரோ அனுப்பி உள்ளனர்.

-விளம்பரம்-
முன்னாள் காதலர் அஜய்யுடன் சனம்

அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் மீரா மிதுன். நடிகை சனம் ஷெட்டிக்கு அஜய் என்ற காதலர் இருந்தது உண்மைதான். தர்ஷனுக்கு முன்பாக அவரை தான் சனம் செட்டி காதலித்து இருந்தார். ஆனால்மீரா மிதுன் சொல்வது போல அந்த அஜய், அம்புலி படத்தின் நாயகன் அஜய் கிடையாது. அவர் சனம் ஷெட்டியுடன் 2015 ஆம் ஆண்டு வெளியான கலைவேந்தன் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அம்புலி படத்தில் நடித்த அஜய்யை, சனம் ஷெட்டி காதலித்து ஏமாற்றியதால் அஜய் தற்கொலை செய்து கொண்டார் என்பது போல மீரா மிதுன் ட்வீட் செய்து இருக்கிறார்.

Advertisement