வயது வித்யாசம் பார்காமல் மோகன் வைத்யாவை இப்படி ஒரு வேலை வாங்கிய மீரா மிதுன்.!

0
1658
Meera-Mithun
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் வந்த நாளிலிருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளில் இவருக்கும் அபிராமி மற்றும் சாக்க்ஷி மறைமுக சண்டை ஏற்பட்டது, ஆனால் அதன் பின்னர் எப்படியோ இருவருமே சமாதானம் ஆகி விட்டார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் செய்த செயல் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மோகன் வைத்யாவிடம் தனது ஜாக்கெட்டில் உள்ள கொக்கியை மாட்ட சொல்லி கேட்டுள்ளார். அதற்கு மோகன் வைத்யா என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்று ஏதோ காரணத்தை சொல்லி முடியாதுஎன்று கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் மனம் கேட்காத மோகன் வைத்யா இந்த வாரக் கேப்டனான வனிதாவிடம் இதைப் பற்றி கூறினார்.

- Advertisement -

இதையடுத்து வனிதா, மீரா மிதுனை அழைத்து மோகன் வைத்யா தன்னிடம் நீ ஜாக்கெட் கொக்கியை போட சொன்னதாக சொன்னார். அது அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே வனிதாவின் பேச்சை கேட்காமல் அவரின் அப்பா மாதிரி நான் அவளுக்கு மகள் என்று வனிதாவின் பேச்சை உதாசீனப்படுத்தி விட்டு சென்றால் மீரா மிதுன். இதனால் மிகவும் கோபம் கொண்டார் வனிதா.

இதன் பின்னர் மோகன் வைத்யாவிடம் பேசிய வனிதா, மீரா மிதுனிடம் நீங்கள் சொன்னதை நான் கூறினேன். ஆனால், அவர் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை, அவளுக்கு நீங்கள் அப்பா மாதிரி என்று கூறிவிட்டார்’ என்று மோகன் வைத்யாவிடம் கூறினார் வனிதா. அதற்கு மோகன் வைத்தியா எனது அம்மா அப்பாவைத் தவிர வேறு யாருக்கும் இது போன்ற வேலைகளை எல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று தக்க பதிலடி கொடுத்தார். இதற்குப் பின்னரும் அடங்காத மீரா மிதுன் வேறு சில விஷயங்களுக்காக வனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அழுது புலம்பி வந்தார்.

-விளம்பரம்-

என்னதான் மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் தனது பிள்ளைகளாக கருதினாலும் வயது வித்தியாசம் பார்க்காமல்மீரா மிதுன் செய்துள்ள இந்த செயல் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மோகன் வைத்யாவும் இதை நேரடியாக கோர முடியாது அதுதான் வனிதாவிடம் கூறினார் ஆனால் அதனையும் காது கொடுத்து கேட்காமல் மீரா மிதுன் செய்த செயல் அனைவரையும் எரிச்சலடைய வைத்தது.

Advertisement